வறட்சியினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு முன்மொழிந்துள்ள 10 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு போதுமானதல்லவென அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு குறைந்தது 50 ஆயிரம் ரூபாவாவது கொடுக்கப்பட வேண்டும் என சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொடுப்பனவுகள் வழங்கப்படும் போது விவசாயிகளுக்கு நிபந்தனையிடுவதை அரசாங்கம் தவிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தாம் குறிப்பிடும் இந்த நஷ்டஈட்டை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, விவசாயத்துறை அமைச்சுக்காக கூலிக்கு பெற்றுள்ள ராஜகிரியவிலுள்ள கட்டிடத்துக்கு செலவு செய்யும் தேவையற்ற பணம் மாத்திரம் போதுமானதாகும் எனவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி நேற்று (17) நடைபெற்ற அதிகாரிகளுடனான கூட்டத்தின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 10 ரூபா வீதம் மாதாந்தம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.