உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் பழனிச்சாமி

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவர் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்தநிலையில் இன்று ஆளுநர் வித்தியாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கமைய இன்று மாலை 4.00 மணிக்கு முதலமைச்சராக அவர் பதவியேற்கிறார் என தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 15 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அறிவுறுத்தியிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு எதிராக தனி அணி அமைத்த முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கருதப்படுகிறது.

Related posts

அசாத் சாலியை இறக்குமதி செய்யவில்லை.

wpengine

ஈமெயில் தொழில்நுற்பக் கோளாறு

wpengine

ஒரு நாள் ஊதியத்தை அனர்த்த நிவாரணமாக வழங்கிய ஊழியர்கள்

wpengine