Breaking
Sun. Nov 24th, 2024

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயரைப் பொறித்து இனவாதச் சூழலியலாளர்களுக்கு தலைமை தாங்கி அவர்களை போஷித்து வரும் ஒடாரா குணவர்த்தன, ஆனந்த தேரர், சஜீவ சமிக்கர தலைமையிலான “சுரகிமு ஸ்ரீலங்கா” என்ற வடக்கு முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கெதிரான முஸ்லிம் விரோத இனவாத அமைப்பு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வடக்கு முஸிம்களின் மீள்குடியேற்றத்திற்கெதிராக ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் அனைவருக்கும் வழங்கிய ’பெண்ட்ரைவ்’ இல் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தமை குறித்து அதிகார சபை, கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை (16) முறைப்பாடொன்றை செய்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்பாட்டாளர்களின் இந்த முறை கேடான செயற்பாடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்களப் பத்திரிகை ஒன்றில் இது தொடர்பாக வெளிவந்திருக்கும் குறித்த செய்தியின் பின்னரேயே இந்த விடயம் அதிகார சபைக்கு தெரிய வந்ததாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்திய இனவாதச் சூழலியலாளர்கள் வில்பத்து தொடர்பில் தொடர்ச்சியாக அமைச்சர் ரிஷாட்டை விமர்சித்து வருவது அனைவரும் அறிந்ததே. அன்றாடம் சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் வில்பத்தை அழித்து இயற்கை வளத்தை அமைச்சர் ரிஷாட் நாசமாக்குகின்றார் என்று இந்த இனவாதிகள் பொய்களைப் பரப்பி வருகின்றார். முசலி மக்களின் மீள்குடியேற்றத்தை சட்டவிரோதமானதென நிரூபிப்பதற்காக குறித்த இனவாதிகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *