தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை!

இலங்கையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தடை செய்யலாம் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார்.

தடை செய்வதற்கான தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அவமதிப்பு தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. அது தொடர்பில் சோதனைகளை நடத்துவதற்காக ஒரு நாள் பேஸ்புக் தடையை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் குறித்து கொள்கைக்குரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு நேரிடும். இது குறித்து தற்போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாகவும் அது பேஸ்புக் தடை செய்வதற்கு அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் திணைக்களத்தின் 9ஆவது அல்- குர்ஆன் கிராஅத் மனன பரிசளிப்பு விழா

wpengine

அமெரிக்காவில் இருந்து முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்திய டொனால்ட் ட்ரம்ப்

Maash

மன்னார் நானாட்டானில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!

Editor