பிரதான செய்திகள்விளையாட்டு

தரங்க, டிக்வெல்ல அதிரடி : ஆஸியை வீழ்த்தியது இலங்கை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

 

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணி சார்பாக வோஜஸ் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் விகும் சஞ்சய பண்டார 3 விக்கட்டுகளையும், நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய லசித் மலிங்க 1 விக்கட்டினையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.1 பந்து ஓவர்கள் நிறைவில் 170 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

இலங்கை அணி சார்பில் டிக்வெல்ல மற்றும் தரங்க தலா 47 ஓட்டங்களையும், டில்ஷான் முனவீர 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

Related posts

வடக்கு,கிழக்கு கோத்தாவின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.

wpengine

மன்னார் பிரதேச செயலகத்தில் Covid தடுப்பு

wpengine

இந்திய மீனவர்களை விடுவித்து, படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் – அநுரவிடம் மோடி கோரிக்கை.

Maash