பிரதான செய்திகள்

ஏறாவூர் இரட்டைக்கொலை : சந்தேக நபர்கள் அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் 6 பேரினதும்  விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் இன்று (08) ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவினை  மேலதிக நீதவான் முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி பிறப்பித்துள்ளார்.

ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன .

Related posts

வவுனியா நீச்சல் தடாகத்தில் முழ்கி ஒருவர் பலி ..!

Maash

பாதயாத்திரையிலீடுபட்டோரின் அருவருக்கத்தக்க செயல்

wpengine

Whats App“பில் மறைத்த தகவல் விரைவில் பேஸ்புக்கில் வெளிவரும்

wpengine