Breaking
Sun. Nov 24th, 2024

(மிஸ்பாஹ்)

கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி மாகாண சபைக்குத் தெரிவாகிருந்தார்.இதன் பின்னர் இவருடைய புகழ் மக்களிடையே ஒரு படி மேல் மிளிர்ந்தது.கடந்த பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பெயரிடப்பட்ட ஐ.தே.கவின் தேசியப்பட்டியலில் அசாத் சாலிக்கு ஒரு இடம் வழங்கப்படுமென அனைவரும் நம்பிருந்த போதும் வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து அசாத்சாலி ஐ.தே.க அரசில் தான் தொடர்ந்தும் நிலைத்திருக்கப்போவதில்லை எனக் கூறி இருந்தார்.எனினும்,காலப்போக்கில் அவரது இக் கருத்து மரித்துவிட்டது போன்றே காணப்பட்டது.அண்மையில் மரணித்த காணி அமைச்சர் எம்.கே.டி,எஸ் குணவர்த்தனவின் வெற்றிடத்திற்காவது அசாத் சாலி நியமிக்கப்படுவார் என நம்பப்பட்டது.

அதுவும் அசாத்சாலிக்கு கை கூடவில்லை.தற்போது திடீர் என தனது மாகாண சபை பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அசாத்சாலியின் இவ் இராஜினாமா மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்த்தனவின் வெற்றிடத்திற்கு தான்  நியமிக்கப்படாமையின் விரக்தியாகவும் இருக்கலாம்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைக் கண்டு நாட்டின் பலமிக்க முக்கிய புள்ளிகளே வாய் திறக்க அச்சப்பட்டுக் கொண்டிருந்த வேளை அசாத்சாலி மஹிந்த அரசின் பிழைகளை தைரியமாக தட்டிக் கேட்டிருந்தார்.அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் குரோத செயற்பாடுகளுக்கெதிராக அதிகம் குரல் கொடுத்தார்.முஸ்லிம் கட்சிகளான மு.கா,அ.இ.ம.கா ஆகியன மஹிந்த அரசின் அமைச்சுக்களை பெற்று அடங்கிக் கிடந்தமை முஸ்லிம் மக்களை தன் பக்கம் ஈர்க்க இவருக்கு மிகவும் சாதகமாகவும் அமைந்தது.

ஒரு தடவை கைது செய்யப்பட்டு சிறையிலும் தள்ளப்பட்டிருந்தார்.எனினும்,இவரது வீரமிக்க பேச்சுக்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.இதனால் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு ஹீரோவாகவும் திகழ்ந்தார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை வீழ்த்தி மைத்திரி  ராஜ்ஜியத்தை அமைக்க முஸ்லிம்கள் மத்தியில் அதிகம் பிரச்சாரம் செய்தார்.அசாத்சாலி மைத்திரியின் வெற்றியினைத் தொடர்ந்து தோற்றம் பெற்ற தேசிய அரசில் தனக்கென ஒரு இடத்தையும் தக்க வைத்திருந்தார்.இவ்வாறு அசாத்சாலி முஸ்லிம்களிடத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் தான் கடந்த பாராளுமன்றத் தேர்தல் வந்தது.இத் தேர்தலில் ஐ.தே.க சார்பாக போட்டி இட்டு தனது மக்கள் செல்வாக்கை நிரூபிக்க அதிகம் முனைப்புக்காட்டினார்.

முஸ்லிம் அரசியல் வாதிகள் கண்டியில் அரசியல் முகவரி பெற்று கண்டியை மறந்து செல்வது வழமையாக இருந்தது.இவ்வாறு அசாத்சாலியும் செய்துவிடுவார் என்ற அச்சம் கண்டி மாவட்ட முஸ்லிம்களிடத்தில் இருந்தது.இதன் காரணமாக அசாத்சாலி கடந்த மத்திய மாகாண சபை தேர்தல் காலப்பகுதியில் இதற்குப் பிறகான தனது அரசியல் வாழ்வு கண்டியினூடாகவே அமையும் என்ற உறுதி மொழியை கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு வழங்கியுமிருந்தார்.இதனால் அசாத்சாலி கடந்த பாராளுமன்றத் தேர்தல் கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க சார்பாக போட்டி இடவே அதிகம் முனைந்தார்.

சில பெளத்த அமைப்புக்கள் கண்டியில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்டியில் ஐ.தே.க சார்பாக இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை மாத்திரமே போட்டி இட அனுமதி அளிக்க வேண்டும் என ஐ.தே.கவிடம் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருந்தன.இக் கோரிக்கையின் பின்னணியிலேயே அசாத் சாலிக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்ததாகவும் சில கதைகள் அந் நேரத்தில் அடிபட்டன.

ஐக்கிய தேசிய கட்சி கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி அமைச்சர் ஹக்கீமிற்கு ஒரு ஆசனத்தை கண்டியில் வழங்கியாக வேண்டும்.கண்டியில் தான் போட்டி இடுவதில் சிறிதும் இடையூறுகள் வந்து விடக் கூடாதென அமைச்சர் ஹக்கீம் அத் தேர்தல் காலத்திற்கு சில நாட்கள் முன்பு கண்டி அஸ்கிரிய பீட மகா நாயக்க தேரர்களையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய ஒரு ஆசனத்தை அசாத்சாலிக்கு வழங்குவதா? அல்லது அமைச்சர் ஹலீமிற்கு வழங்குவதா? என்ற சிந்தனையில் ஏற்கனவே தாங்கள் அமைச்சை வழங்கி உருவாக்கி

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *