Breaking
Fri. Nov 22nd, 2024

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆதரவில் ஏற்கனவே நாம் அறிவித்திருந்தபடி, எமது வேலைத்திட்டங்களுள் ஒன்றான புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு “உணவுகூடம்” அமைத்தலுக்கான கட்டுமானப் பணிகள் யாவும் பூர்த்தியாகி நேற்று 26.01.2017 வியாழக்கிழமை காலை புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திருமதி.சத்தியபாமா தர்மராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி திறப்புவிழாவில் திருமதி. குமாரதாசன் ஆனந்தி (உதவிக்கல்விப்பணிப்பாளர் -வழிகாட்டலும் ஆலோசனையும்- தீவக கல்வி வலயம்), புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியப் பொருளாளர் திருமதி. சுலோசனாம்பிகை தனபாலன், புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி  பயிற்றுவித்த யாழ் ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியையும், புங்குடுதீவு தாயகம் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவருமான செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

முதலில் சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, அதிபர், மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் மங்கள விளக்கேற்றப்பட்டு, மாணவர்களினால் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு, ஆசிரியை செல்வி.கேதீஸ்வரன் மாதுரி அவர்களினால் வரவேற்புரை நடாத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிற்றுவித்த யாழ் ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியை செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமார் அவர்களினால், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆதரவில் கட்டப்பட்ட  புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கான “உணவுகூடம்” திறந்து வைக்கப்பட்டது.

 

இதன்போது மேற்படிக் கட்டிட ஒப்பந்தக்காரரான திரு.அ.விஜயன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.  மேற்படி நிகழ்வில் ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வின் போது, யா/புங்குடுதீவு றோ.க.த.க.பாடசாலையில் தரம் 5 புலமைப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு “அன்பு வெளியீடு” பயிற்சிப் பரீட்சைக்காக  20 பிள்ளைகளுக்கான செலவு தொகையை அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகள் ஞாபகர்த்தமாக “புங்குடுதீவு தாயகம் அமைப்பினர்” வழங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *