Breaking
Fri. Nov 22nd, 2024

(அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பவற்றின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாரு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கோறிக்கை விடுத்தார்.

26.01.2017ம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது பல் மருத்துவ பட்டதாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட பயிற்சி வழங்குவதற்கான மருத்துவ கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வரைபில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் தொடர்ந்து உறையாற்றுகையில்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் மிகவும் பழமை வாய்ந்த வைத்தியசாலையா காணப்படும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வெருகல் தொடக்கம் செங்கலடி வரை இருக்கின்ற அனைத்து பிரதேசங்களுக்கும் தனது அளப்பரிய சேவையினை வழங்கி வருகின்ற வைத்தியசாலையாகக் காணப்படுவதுடன் அங்கு பாரிய குறைபாடுகளும் காணப்படுகின்றன அந்தவகையில் 343 ஊழியர்கள் தேவைப்படுகின்றபோதும் 155 ஊழியர்கள் மாத்திரமே கடமையாற்றுகின்றனர் அதுமட்டுமன்றி இடப்பற்றாக்குறையும் பெரிதாகக் காணப்படுவதனால் 1200 மில்லியன் ரூபா பெறுமதியளவிலான கட்டிடம் தேவையாக உள்ளது இத் தேவையினை நிவர்த்தி செய்வதற்கு சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அதிக கவனம் எடுத்து செயல்படுவார் என்று நம்புகின்றேன் கௌரவ ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த நாட்டில் சுகாதாரத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்ற விடயத்தில் எவரும் மாற்றுக்கருத்தினை முன்வைக்க முடியாது.

சிறுபான்மை மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற அமைச்சர் அவர்கள் எங்கள் பிரதேசங்களில் இருக்கின்ற வைத்தியசாலைகளின் குறைபாடுகளை மிகவும் விரைவாக நிவர்த்தி செய்து தருவார் என்கின்ற நம்பிக்கையில் சொல்கிறேன் அவர் பாராளுமன்றத்தில் இருந்து இப்பிரச்சினையினை கேட்டுக்கொண்டிருப்பதனால் நிச்சயமாக இவ்விடயங்கள் தொடர்பில் கூடிய கரிசனை எடுப்பார் என்று நம்புகின்றேன்.

இதேபோன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை 2006 ஆம் ஆண்டு போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது அப்போது 11 விஷேட வைத்திய நிபுணர்கள் மாத்திரமே இருந்தார்கள் தற்போது அதன் தொகை 51 ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது ஆரம்பத்தில் 11 விஷேட வைத்திய நிபுணர்கள் இருக்கும் போது சிகிச்சை வழங்குவதற்குரிய நோயாளி அறை இல்லாத காரணத்தினால் அந்த 11 விஷேட வைத்திய நிபுணர்களும் அங்குமிங்கும் தடுமாறி கொள்கின்ற நிலவரம் ஏற்பட்டிருந்தது அது இப்போதும் தொடர்கின்றது இந்த விடயத்தில் சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன உடனடி நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றேன் மேலும் கடந்த காலங்களில் ராஜித சேனாரத்ன அவர்களின் பங்களிப்பு இந்த வைத்தியசாலைக்கு அளப்பரியது அதற்காக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாக நான் நன்றி கூற கடமைப்பட்டவனாக இருக்கின்றேன்.

அதுமட்டுமன்றி எங்களுடைய மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு புதிய விடயம் போதை மாத்திரைகளுக்கு இளைஞர்களும் பெரியவர்களும் அடிமைப்பட்டு இருக்கின்றனர் இதனால் பாரிய பிரச்சினை பாடசாலை மாணவர் மத்தியிலும், சமூகத்தின் மத்தியிலும் ஒரு பூதாகரமான பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கின்றது இதற்கு கௌரவ சுகாதார அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுத்து எங்களது மாவட்டத்தில் இருந்து போதைப் பொருள் பாவனையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் போரினால் பாதிக்கப்பட்டு வீழ்ந்து போயிருக்கின்ற காலகட்டத்தில் போதை மாத்திரைகள் மூலம் இளம் சமுதாயம் பாரிய நோய்வாய்ப்படுகின்ற ஒரு சமூகமாக மாறி வருகின்றது அதனால் மாவட்டத்தில் பிரதேச செயலகம் தோரும் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகிறோம் அவ் வேலைத்திட்டத்திற்கும் சுகாதார அமைச்சின் ஊடாக அமைச்சர் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என்று இவ் உயரிய சபையில் கோறிக்கை விடுகிறேன்.

அதேபோன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவிருக்கின்ற விடயம் எங்கள் மாவட்டத்திற்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதம் என நினைக்கின்றேன் இவ்வைத்தியசாலை விடயத்தில் கடந்த காலத்தில் பங்களிப்புச் செய்தவர்களை நன்றிகூற கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம்.

இதேபோன்று கோறளைப்பற்று மத்தி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் குறைபாடுகளை எதிர்காலத்தில் பரிபூரணமாக நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று கௌரவ அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன்.

அண்மையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளிநாட்டு நன்கொடை மூலமாக 100 மில்லியன் பணத்தைக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவொன்றை ஆரம்பித்தார் இதேபோன்று ஏறாவூர் வைத்தியசாலைக்கும் கொண்டுவர முயற்சித்தபோது கிழக்கு மாகாண முதலமைச்சர் தடுத்து நிறுத்தினார் இதனை இவ்வாறு தடுப்பதற்கு என்ன காணரம் என்று எனக்கு தெரியாது ஏறாவூர் வைத்தியசாலைக்கு அவராவது இதனை செய்து கொடுக்க முயற்சிக்க வேண்டும் இவ்வாறான நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொண்டால் மேலும் அப்பிரதேசம் அபிவிருத்தியடையும் என நான் நம்புகின்றேன்.

கௌரவ சுகாதார அமைச்சரால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற சட்டமூலம் இந்த நாட்டில் இருக்கின்ற பல் வைத்தியத் துறைக்குத் தேவையான சட்டம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *