(ப.பன்னீர் செல்வம், எம்.எம்.மின்ஹாஜ்)
அமைச்சரவையில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி கோரி யோசனை முன்வைக்கப்படவில்லை. இப்படி யோசனை முன்வைக்கப்பட்டதாக கூறியது யார்? மனித உரிமை செயற்பாட்டுத் திட்ட அறிக்கையில் பாலியல் நாட்டம் என்ற யோசனையே முன்வைக்கப்பட்டதாக சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மருத்துவ திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஓரினச்சேர்க்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதன்மூலம் எயிட்ஸ் நோய் அதிகளவில் பரவி வருகின்றது. ஆகவே இது குறித்து அரசாங்கம் அவதானமாக செயற்படுகின்றது.
எனினும் ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம் கோரி அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இப்படி யோசனை முன்வைக்கப்பட்டதாக யார் கூறியது? அமைச்சரவையில் ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம் கோருமாறு யோசனை முன்வைக்கப்படவில்லை.
இது முற்றிலும் தவறான கருத்தாகும்.
அதற்கு மாறாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மனித உரிமை திட்டத்தின் பிரகாரம் பாலியல் நாட்டம் என்று முன்வைக் கப்பட்ட யோசனையே நிராகரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை யின் அடிப்படையிலேயே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது என்றார்.