Breaking
Fri. Nov 22nd, 2024
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் போர்வீர சேவைகள் அதிகார சபையினால் யுத்தத்தின் போது உயிர்நீத்த இராணுவம்,கடற்படை,வான்படை மற்றும் பொலிஸ்,சிவில் பாதுகாப்புப் படையின் ஆகியவற்றின் அதிகாரிகள் உட்பட ஏனைய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி வழங்கும் விஷேட நிகழ்வு 26-01-2017 நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

போர்வீர சேவைகள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி கீர்த்திகா ஜெயவர்தன தலைமையில் இடம்பெற்ற மேற்படி உதவி வழங்கும் விஷேட நிகழ்வில் பிரதம அதிதியாக போர்வீர சேவைகள் அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேக்கா கலந்து கொண்டார்.
இதன் போது மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களான 500 மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், உயிர் நீத்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு சுய தொழிலை ஆரம்பிக்க தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் , இலவச விஷேட தையல் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிப் பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, போர்வீர சேவைகள் அதிகார சபையின் உப தலைவி திருமதி .உபுலாங்கனி மாலகமுவ , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் ,முப்படைகளின் உயரதிகாரிகள், போர்வீர சேவைகள் அதிகார சபையின் பிரதிநிதிகள், மட்டு-அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *