பிரதான செய்திகள்

ஐல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாரில் பேரணி.

(பிராந்திய செய்தியாளர் )

கடந்த ஓரிரு தினங்களாக தமிழகம் மற்றும் உலகின் அனைத்து தமிழர்கள் வாழும் இடங்களிலும் இதேபோன்று இலங்கையின் பல பாகங்களிலும் ஐல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கி பெரும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தமிழர் பாரம்பரியத்துக்காக இனம் மதம் நாடு அனைத்தையும் தாண்டி தமிழர் என்ற ஒற்றுமையோடு குரல் எழுப்பப்படும் இவ்வேளையில் மன்னார் மாவட்டத்திலும் மன்னார் நகரை அண்டிய இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கி பேரணி ஒன்று நேற்று சனிக்கிழமை (21.01.2017) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நாற் சந்தியில் இடம்பெற்றது.

இதில் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.இவ்போராட்டத்தின்போது இவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் ‘தமிழனின் வீர விளையாட்டை தடைசெய்யாதே, தமிழ் பண்பாட்டை அழிக்காதே’, ‘தமிழர் உரிமையை தடுக்காதே’, ‘சல்லிக்கட்டு எங்கள் மரபுரிமை அதை தடை செய்ய பீட்டாவுக்கு ஏது உரிமை’ என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தது.

Related posts

பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு

wpengine

ஜனாதிபதியும் பிரதமரும் வில்பத்துக்கு நேரடியாக விஜயம் செய்யவேண்டும்- முஸ்லிம் பிரதிநிதிகள்

wpengine

உதா கம்மான (கிராம எழுச்சி) வெலிஓயாவில் ஆரம்பித்து வைத்த சஜித்

wpengine