Breaking
Sun. Nov 24th, 2024
நல்லிணக்கத்துக்கான வாய்ப்புக்களை தெற்கிலிருந்து வழங்கினாலே உறுதியான நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஜேவிபியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று மாலை கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற நல்லிணக்கமும் நாட்டின் எதிர்காலமும் என்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றுகையில் ஜே.வி.பி யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

இதுவரை ஆட்சியில் இருந்த சிங்களத் தலைவர்கள் இனவாதத்தை மூலதனமாக கொண்டு தமது ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்து வந்தனர்.anura_kilino_001

சிங்களச்சட்டம் யாழ். நூலக எரிப்பு என்பவை இனவாதத்தை தூண்டி சுயலாப அரசியலை பலப்படுத்தவே உதவியது. இதனால் ஏற்பட்ட யுத்தம் அப்பாவி சிங்கள, தமிழ் சமூகத்தை பலியாக்க காரணமாகியது.

இப்போதய நல்லாட்சி அரசுகள் கூட பொறுப்பற்றுச் செயற்படுகின்றது.காணாமல் போனவர் குறித்து பொருத்தமற்ற பதில்களை பிரதமர் வழங்குகிறார்.anura_kilino_004

கேபி, டக்ளஸ், கருணா போன்றவர்களிடம் கப்பல்களையும் காசுகளையும் பெற்றுக்கொண்டு அவர்களை வெளியே விட்டவர்கள், அவர்கள் துப்பாக்கி வழங்கப்பட்ட இளைஞர்களை இன்றும் உள்ளே வைத்திருக்கிறார்கள்.

உயர்பாதுகாப்பு வலயம் என்று ஏராளமான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. இங்கே என்ன நடக்கிறது.

அதிகாரத்தை காப்பாற்றுவதற்கான ஆட்சி நடக்கிறது. நல்லிணக்கத்துக்கான வழிகளை யார் திறப்பது. ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி நல்லிணக்கம் மிகுந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.anura_kilino_003

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களும் கலந்து கொண்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *