உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மொராக்கோவில் புர்கா தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை

மொராக்கோவில் புர்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புர்கா தயாரிப்பு மற்றும் இறக்குமதியும் தடை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத்தடை குறித்த கடிதங்கள் கடந்த திங்கள்கிழமை அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தம்மிடமுள்ள புர்கா அனைத்தையும் 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை அரச தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அதேசமயம் இந்த முடிவு “பாதுகாப்பு காரணங்களுக்காக” எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனாலும், இப்போது மொராக்கோ புர்காவை முற்றாக தடைசெய்யவுள்ளதா என்பது குறித்து தெளிவாக்கப்படவில்லை.

Related posts

தழிழ் கைதிகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் சிவசக்தி ஆனந்தன்

wpengine

கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள்.!

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ள சி.வி.விக்னேஸ்வரன்

wpengine