பிரதான செய்திகள்

பெப்ரல் அமைப்புக்கு அமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளிப்பு

எதிர்வரும் 17 ஆம் திகதி அனைத்து உறுப்பினர்களினதும் கையொப்பத்துடனான அறிக்கையொன்றை கையளிப்பதற்கு அசோக்க பீரிஸ் தமக்கு உறுதியளித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அதனால் குறித்த அறிக்கை தமக்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

அந்த அறிக்கை கிடைத்த மாத்திரத்தில் அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக அனைத்து பிரச்சினைகளும் எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் எனவும், அவ்வாறு நிறைவேறாவிட்டால் துறைசார்ந்த அமைச்சருக்கும், குழு உறுப்பினர்களுக்கும் என நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்திருந்தது.

அந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாவே அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த பதிலை அளித்துள்ளார்.

Related posts

வேறு கட்சிக்காரர் தோற்கடிக்கப்பட வேண்டும் என சில அரசியல் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

wpengine

தனிக்கட்சியாக போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அரசியல்வாதிகள் மகிந்தவை சூழ்ந்துள்ளனர்: பண்டார

wpengine

புத்தளம் தப்போவ பகுதியில் 220 இற்கும் மேற்பட்டோர் வௌ்ளம் காரணமாக நிர்க்கதி

wpengine