Breaking
Fri. Nov 22nd, 2024

(இப்றாஹிம் மன்சூர்)

 

இலங்கையில் இனவாதம் மிக உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.தற்போது இவ்வரசின் மீது பலத்த விமர்சனங்கள் முஸ்லிம் தரப்புக்களிடமிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ இனவாதத்தை கட்டுப்படுத்த தவறியிருந்தாலும் அதற்கு தீனி போடும் வகையிலான பேச்சுக்களை பேசியதில்லை.இன்றைய ஜனாதிபதியின் உரைகள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமான முறையில் அமைந்துள்ளதோடு இவ்வாட்சியின் பங்கு தாரர்கள் போன்று இனவாதிகள் கவனிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவை வீழ்த்தி மைத்திரியை ஜனாதிபதியாக்கியது இந்த இனவாதிகள் தானே?

 

இதனை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய மு.கா அவர்களுக்கு குடை பிடித்து திரிவதான விமர்சனத்தை முஸ்லிம் தரப்பிலிருந்து பலரும் முன் வைக்கின்றனர்அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,மு.கா தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்ற பாணியில் கூறியுமிருந்தார்.வில்பத்து விடயமாக அனைவரும் ஒன்றிணைந்தாலும் அமைச்சர் ஹக்கீமை  மாத்திரம்  அங்கு காணவில்லை.அதற்கு எதிராக பெரிதாக பேசவுமில்லை.வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பில் பேசுவார் என்று பார்த்தால் அது தொடர்பிலும் எதுவும் பேசுவதாக இல்லை.அமைச்சர் ஹக்கீம் ஏதேனும் பேசுவார் என்று பார்த்தால் அதனையும் காண முடியவில்லை.ஞானசார தேரர் பற்றி பேசுவார் என்றால் அதனையும் காணக்கிடைக்கவில்லை.தற்போது முஸ்லிம் தரப்பானது முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் கூறி வருகின்றனர்.அமைச்சர் றிஷாத் அனைவரும் சேர்ந்து  தீர்மானித்தால்,தான் அமைச்சை துறக்க தயார் எனவும் அறிவித்துள்ளார்.

 

அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம்கள் விடயத்தில் இந்தளவு கரிசனையற்றிருக்க என்ன காரணம்? அவர் இவ்வாட்சியின் முக்கிய பங்காளர்.இதனை நான் கூறவில்லை.இன்று 12-01-2017ம் திகதி வியாழக் கிழமை தோப்பூர் விளையாட்டு அரங்கை திறந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் நாங்கள் இவ்வரசின் முக்கிய பங்காளிகளாக இருக்கின்றோம் என்ற விடயத்தை அழுத்தமாக கூறியிருந்தார்.இவ்வாட்சியின் முக்கிய பங்காளர்களாக இருந்து கொண்டு எவ்வாறு எதிர்க்க முடியும்? இவ்வாட்சியை கண்டிக்க வேண்டிய அமைச்சர் ஹக்கீம் இவ்வாட்சிக்கு தாலாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவ்வாட்சியின் பிரதான கட்சிகளாகவுள்ள ஐ.தே.க,சு.கா ஆகியன கூட இவ்வாட்சி உதித்த நாளை கணக்கெடுக்கவில்லை.மு.காவின் முதலமைச்சர் உட்பட பல பெரும் புள்ளிகள் துஆ பிராத்தனைகள் கூட செய்திருந்தனர்.இந்த ஆட்சி முஸ்லிம் சமூகத்தின் மு.காவின் முக்கிய புள்ளிகளுக்கே மகிழ்வை கொடுத்துள்ளது.அதற்கான காரணத்தை நான் சொல்லித் தான் நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை.இனியும் முஸ்லிம் சமூகம் இவரை நம்ப முடியுமா?

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *