Breaking
Sun. Nov 24th, 2024

கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு விவாதத்தின் மூன்றாவது நாளான 22.12.2016ஆந்திகதி (நேற்று) கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதியின் வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வர் உரையாற்றுகையில்.

கிழக்கு மாகாணத்தில் வீதி அமைச்சர் பல வீதிகளை தனது அமைச்சின்கீழ் செப்பனிட்டு வருகின்றார். அதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இங்கு பேசும்போது மாகாண சபை உறுப்பினர் ஜயந்த விஜேசேகர அமைச்சர் நீதியாக இனங்களுக்கு சமமாக பங்கிடுவதாக குறிப்பிட்டார் ஒன்றை கெளரவ. உறுப்பினருக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த 2015ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தியினால் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று இனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை கெளரவ. அமைச்சர் ஆரியவதி கலப்பதி அவர்கள் தனியாக வானலை பெரும்பான்மை மக்கள் வசிக்கும் பகுதிக்கு மாத்திரம் கார்பெட் வீதியை போட்டிருப்பது குறித்து நாம் பல தடவை சுட்டிக்காட்டினோம். அதன் பிற்பாடுதான் அமைச்சர் இவ்வருடம் ஓரளவு சமமாக பங்கிட காரணமாக அமைந்தது என்பதனை கெளரவ உறுப்பினருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள பகுதிகளில் அதிலும் குறிப்பாக புல்மோட்டை பிரதேசத்தில் ஒரு வீதியேனும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானதாக ஒரு வீதி கூட இல்லாமல் இருக்கும் நிலை காணப்படுகின்றது. எனவே எதிர்வரும் வருடமாவது ஒதுக்கப்படுகின்ற வீதிகளில் குறித்த பகுதிகளுக்கு ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். மாவட்டத்தில் பல காணிப்பிரச்சினைகள் உள்ளன புல்மோட்டை பிரதேசத்தில் பல ஏக்கர் காணிகள் இன்னும் படையினர் வசம் உள்ளது புல்மோட்டை மண்கிண்டிமலை பிரதேசத்தில் 104 ஏக்கர் 13ஆம் கட்டை பகுதியில் 50 ஏக்கர் காணிகள் என கடற்படையினர் மற்றும் இராணுவத்தினராலும் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை விடுவித்து உரிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறே குச்சவெளி பிரதேசத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியில் இன்னும் கடற்படையினர் நிலை கொண்டிருப்பது பெரும் அநியாயமாகும் குறித்த வீட்டில் சுமார் இரண்டு கடற்படை சிப்பாய்கள் மாத்திரம் உள்ளனர். மேலும் மூதூர் றால்குழி நாவலடி 16 முஸ்லீம் குடும்பங்களுக்காக வழங்க வேண்டிய காணிகள் அளவிடப்பட்டு உரிய அனுமதி பாத்திரங்களை கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள கள்ளம்பத்தை 10 வீட்டுத்திட்டம் இலங்கை இராணுவத்தினரால் நிலைகொண்ட நிலையில்1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களால் கட்டிக்கொடுக்கப்பட்டது அவற்றை ஏன் என்னும் இந்த நல்லாட்சியில் விடுவிக்கவில்லை.

கிண்ணியா குச்சவெளி மற்றும் தம்பலகாமம் களவான அட்டவான கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும். இன்று பால் உற்பத்தியில் கிண்ணியா பிரதேசம் மாவட்டத்தில் முதல் இடத்தை வகிக்கின்றது. மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது இடத்திலுள்ளது தேசிய உற்பத்தியில் பங்கை வகிக்கும்போது ஏன் அவற்றை விடுவிக்க முடியாது. வடக்கில் பல ஏக்கர் காணிகள் கிழக்கில் சம்பூரில் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கும்போது இவ்வாறு சிறு சிறு பகுதிகளை படையினர் கையகப்படுத்தியிருப்பது இந்த நல்லாட்சியில் பொருத்தமற்றது.

மேலும் மதஸ்தலங்களுக்கு காணிகள் வழங்கப்படுகின்றபோது சமனான பகிர்வு இடம்பெறுகின்றதா உதாரணமாக திருகோணமலை கொமரங்கடவள பௌத்த விகாரைக்கு அண்மையில் ஜனாதிபதி வருகையின் பொது 15 ஏக்கர் காணி அளிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லீம் மற்றும் தமிழ் சமூகத்தின் மதஸ்தளங்களுக்கு மாத்திரம் நீண்டகால குத்தகைக்கு பகிர்ந்தளிப்பது எந்த விதத்தில் நியாமானது.

அவற்றினூடாக சிறுபான்மை சமூகங்களுக்கு ஒரு நியாயமும் பெரும்பாண்மை சமூகத்தினருக்கு இன்னொரு நியாயமும் காட்டுவது இந்த நாட்டில் சம உரிமை நல்லாட்சியிலும் இல்லை என்பது உணர்த்துகின்றது. எனவே அவைகள் மாற்றப்பட்டு அனைவருக்கும் சமனான பகிர்வு அளிக்கப்படவேண்டும். காணிகள் நீண்டகால குத்தகைக்கு வழங்கும்போது வெளி மாவட்ட மற்றும் மாகாண முதலீட்டாளர்களுக்கு அதிகமான ஆர்வம் கொள்கிறீர்கள் அவ்வாறு காணிகள் வழங்கும்போது எமது மாகாணத்திலுள்ளர்வர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *