(அஷ்ரப் ஏ சமத்)
வவுனியா கல்வியற்கல்லூரியை அரசாங்கம் வடக்கின் ஆசிரிய பல்கழைக்கழகமாக மாற்றுவதற்கு அகதி முகாம்கள் தடையாகவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி கே.சிதம்பரநாதன் நேற்று (15 ஆம் திகதி) தெரிவித்தார்.
கடந்த 19 ஆண்டுகளாக இக்கல்விக்கல்லூரியில் 6 ஏக்கர் நிலத்திலும் எங்களது விடுதிக்கட்டடங்களிலும் இந்த மக்கள் வாழ்வதனால் அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய கல்வி அபிவிருத்தி வீணடிக்கப்பபடுகின்றது. கல்வியமைச்சின் புதிய கல்விக்கொள்கைக்கேற்ப நாடு முழுவதிலும் 25 கல்விக்கல்லூரிகளை ஆசிரிய பல்கலைக்கழகக் கல்லூரியாக 2015ஆம் ஆண்டின் மாற்றுவதற்கு கல்வியமைச்சு தீர்மானமெடுத்துள்ளது. வருடா வருடம் இக்கல்லூரி 500 ஆசிரியர்களை உருவாக்கி வருகின்றது. இம்மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்களை பட்டப்படிப்பினைப் போதித்து, அக்கல்வி மூலம் நவீன முறையில் எதிர்காலத்தில் சிறந்த கல்விச்சமூகத்தினை உருவாக்குவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதெனவும் பீடாதிபதி தெரிவித்தார்.
இங்கு நேரடியாக விஜயம் செய்து, அம்மக்களையும் அவர்கள் வாழும் பிரதேசத்தினை அவதானித்த போது,
அகதிகளின் நலன்புரித்தலைவர் கே. வேலாயுதம் (வயது 69) தெரிவிக்கையில்,
கிளிநொச்சியில் 1990 ஆம் ஆண்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அகதிளை அரசாங்கமே எங்களை இங்கு அழைத்து வந்து குடியமர்த்தினார்கள் எனத்தெரிவித்தார்.
நாங்கள் 83 களில் இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினையினால் மலையகப்பகுதிகளிலிருந்து கிளிநொச்சியில் வந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தோம். கிளிநொச்சியில் கடந்த 4 தசாப்தங்களாக 3 பரம்பரையினர்கள் வடக்கிலேயே பிறந்து, இங்கு திருமணம் முடிந்து பல குடும்பங்களாகப் பெருகி வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவே இங்கு அகதிகாளக வந்தோம். ஏற்கனவே, 89 குடும்பங்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். அதில், 18 குடும்பங்கள் இக்கல்விக் கல்லூரியின் கட்டடத்திற்குள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் இந்த அகதி முகாமில் தற்பொழுது “10 சதுர அடி நிலப்பரப்பில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வருகிறோம்” ஏன வேலாயுதம் தெரிவித்தார். அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு கடந்த 10 வருட காலமாக எவ்வித உதவிகளோ நிவாரணங்களோ தங்களுக்கு கிடைப்பதில்லை. இவ்விடயம் சம்பந்தமாக காலத்திற்கு காலம் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடமும் எங்களது பிரச்சினைகளைத் தெரிவித்து வருகின்றோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எவ்வித நடவடிக்களையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தாங்கள் கடந்த 19 வருடங்களாக வாழ்ந்து பழகி விட்டோம்.
இந்நலன்புரிச்சங்கத்தின் செயலாளர் ரூபன் தெரிவிக்கையில், நான் ஆறு வயதில் எனது தாய் தந்தையருடன் இந்த அகதி முகாமுக்கு வந்தேன். தனக்கு தற்போது 25 வயது. இந்த அகதி முகாமில் வாழ்ந்த பெண்ணைத் திருமணம் முடித்து, தனக்கு 3 குழந்தைகள் உள்ளன. அவர்கள் இந்த முகாமில் வாழ்கிறார்கள். கல்வியற்கல்லூரிக்கு அருகாமையில் அரச காணியுள்ளது. அதில் மீளக்குடியமர்த்துமாறும் வேண்டுகின்றோம். இவ்விடத்திலேயே எங்களது தொழில், பிள்ளைகளின் பாடசாலைக்கல்வி வசதியுள்ளது எனத்தெரிவித்தார்.
இவ்விடயம் சம்பந்தமாக வவுனியா பிரதேச செயலாளர் உதயராசா அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த மக்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி முன்னேற்றுவது அரசாங்கத்தின் நோக்கமாகும். வவுனியா வடக்கு அரச காணியில் இலண்டனிலுள்ள ஞானம் எனும் அரச சார்பற்ற நிறுவனம் வீடுகளை நிர்மணிக்க முன்வந்துள்ளது. தற்பொழுது 80 வீதமான நிர்மாண வேலைகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்நிறுவனத்தினால் அப்பிரதேச குளம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் காணியும் சகல அடிப்படை வசதிகளையும் கொண்ட வீடுகள் மற்றும் பாடசாலை ஆகியனவும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கான வசதிகளும் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அப்பிரதேசதம் அபிவிருத்தி செய்யப்பட்டு மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். இருந்தும், இம்மக்கள் பழைய வாழ்கை நிலையிலேயே வாழ்வதற்கு குறுகிய நோக்கம் கொண்ட சிலரே இம்மக்களை குழப்பி அங்கேயே நிரந்தரமாக தங்க வைப்பதற்கு முயற்சிக்கின்றனர். இம்மக்களை மீளக்குடியமர்த்தினால் வவுனியா மாவட்டத்திலே இக்கல்விக்கல்லூரி பல்கலைக்கழக கல்லூரியாக மாறி, இந்த மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளது ஆசிரியர்களை உருவாக்குவதற்கு ஏதுவாக அமையும். ஒரு மாவட்டத்தின் கல்விக்கு இக்கல்லூரியில் வளவிலும் கட்டடங்களிலும் தங்கியிருக்கும் மக்களால் கல்வி அபிவிருத்திக்குத் தடையாகவுள்ளதகாவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார். –
அவதானம்
இங்கு கல்விக் கல்லுாாியின் அபிவிருத்திக்கு இந்த மக்கள் வாழ்வதால் வவுனியா மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கு தடை என வவுனியா கல்விக் கல்லுாாியின் பீடாதிபதி தெரிவித்துள்ளாா்.
அகதிகள் தகவல் தருகையில் – நாங்கள் கடந்த 4 தசாப்தங்களாக யுத்ததினால் சொல்லொன்னாத் துண்பங்களை அனுபவித்தும் இன்றும் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்கின்றோம். 3 பரம்பரையினா் மணித குடியிருப்புக்கு பொருத்தமற்றதும் எவ்வித அடிப்படைவசதிகள், வாழ்வதாரமுமின்றி குடியிருப்புக்களில் வாழ்கின்றனா். என அவா்கள் தெரிவிக்கின்றனா்.
ஆனால் பிரதேச செயலாளா் இம் மக்களது வாழ்க்கைத் தரத்தினை உயா்த்தி சிறந்த நவீன முறையில் இவா்களை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தும். இந்த மக்கள் தமது பழைய வாழ்க்கைக்கும் தாம வாழ்ந்த பிரதேசத்தில வுவனியா நகரம் அருகில் இருப்பதால் இவ் வாழ்க்கையை மீண்டும் தொடா்வதற்கு இவா்களது புதிய பரம்பரையினா் தடைவிதிக்கின்றனா். இம் மக்கள் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத்திற்கு இணங்கினால் இந்தக் கல்விக் கல்லுாாியின் முன்னேற்றம் தொடா்நது முன்னெடுப்பததில் எவ்வித தடையுமில்லை என தெரிவிக்கின்றாா்.