உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை முட்டாள் தனமானது: டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

அவரது இந்த வெற்றிக்கு ரஷியா உதவியதாக அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.’ உளவுத்துறை ரகசிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அது குறித்து விசாரணை நடத்த தற்போதைய அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பிடம் ஒரு செய்தி நிறுவனத்தின் நிருபர் பேட்டி கண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது வெற்றிக்கு ரஷியா உதவியதாக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை முட்டாள் தனமானது என கருதுகிறேன். இது தோல்விக்கான மற்றொரு சாக்கு போக்கு என நினைக்கிறேன். எனவே ரஷியா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு நம்ப தகுந்தது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ‘ஒரே சீனா திட்டத்தை’ அமெரிக்க தொடர்ந்து கடை பிடிக்குமா? என அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “வர்த்தகம் மற்றும் பிற பிரச்சினைகளில் சீனா விட்டுக் கொடுத்தால் மட்டுமே அந்த நிலை தொடரும். எனக்கு சீனா அதிகாரத்துடன் ஆணையிடுவதை நான் விரும்பவில்லை” என்றார்.

Related posts

சதாசிவம் வியாழேந்திரன் புதிய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

wpengine

ஒரே தடையில் 8 தொலைபேசி அழைப்புகளை எடுக்க முடியும்! ஒருவர் கைது

wpengine

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யும் ஜனாதிபதி!

Editor