(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கடந்த காலங்களில் பேட்டி கண்ட அல்லது விவாதத்துக்கு அழைத்திருந்த சிங்கள தொலைக்காட்சிகள் கூட இவ்வாறு செயற்படவில்லை.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்குமிடையில் மோதலை ஏற்படுத்த முயற்சி!
முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஒரு தீர்வுக்காக முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து, கருத்தொருமித்துள்ள நிலையில் இவ்வாறான கசப்பான பழைய விடயங்களை காட்டி ஆக்ரோஷப்படுத்தி அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டதா?
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஒரு மிக மோசமான மனிதனாக மக்கள் மத்தியில் காட்டுவதற்கு மேற்கொள்ளப்பபட்ட மிகப் பெரிய பிரயத்தனம்.
தொலைபேசி அழைப்புகள் ஊடான பல கேள்விகளை நிராகரிக்கும் வண்ணம் இணைப்புகள் தொடர்ந்து எங்கேஜ் நிலையில்.
முகநூலில் கேட்கப்பட்ட கேள்விகளும் நிராகரிப்பு!
மிக மோசமான தங்களின் கேள்விகளை அரங்கேற்றி அவமானப்படுத்துவதற்காகவும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஐக்கியத்தையும் சிதைக்கும் வகையிலும் ஏலவே தயாரிக்கப்பட்ட கேள்விகளுடனான இன்றைய அதிர்வு ஓர் அசிங்கம்.