Breaking
Sun. Nov 24th, 2024

(இப்றாஹிம் மன்சூர்)

ஒரு கட்சியின் தலைவராக ஒருவர் வர வேண்டுமாக இருந்தால் அதற்கென்று சில தனித்துவமான பண்புகள் உள்ளன.எச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கும் தைரியம் வேண்டும்.அதிலும் குறிப்பாக ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பாராளுமன்றத்தில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன் வைக்க வேண்டும்.தற்போது மு.காவின் தலைவராகவுள்ள அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் மௌன விரதம் இருக்கின்றார்.மு.காவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் ஹரீஸ் தவிர்ந்து ஏனையவர்களது பேச்சுக்களை கரடி பிறை கண்டது போலவே காணக்கிடைகிறது.

 

அண்மைக் கால ஹரீசின் பாராளுமன்ற பேச்சுக்களில் நல்லாட்சி அரசின் பலஸ்தீன்,இஸ்ரேல் வெளியுறவுக்  கொள்கை கவலையளிக்கிறது.கல்முனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத சேவையை பொத்துவில் வரை விஸ்தரிக்க வேண்டும்.விவசாயிகளின் காணி விவகாரத்தில் ஜனாதிபதி பிரதமர் தலையிட வேண்டும்.ஒலுவில் படகுப் பாதையை.மூடியுள்ள மண்ணை அகற்ற வேண்டும்.இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை கண்டித்து பேசியமை என அடிக்கிக்கொண்டே செல்லலாம்.

 

தற்போது மு.காவின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் பேச வேண்டிய பேச்சுக்களை ஹரீஸ் செவ்வெனே செய்து வருகிறார்.இதற்கு பிறகு அமைச்சர் ஹக்கீமை நம்பி பயனில்லை என அறிந்து கொண்டு தான் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சமூக பேச்சுகளை முன்னின்று செய்கின்றாரோ தெரியவில்லை.ஹரீஸ் அரசியலுக்குள் நுழைந்த ஆரம்ப காலப்பகுதியில் மிகவும் சமூக அக்கறை கொண்டவராகத் தான் இருந்தாரென அவருடன் இருந்தவர்கள் கூறுகின்றனர்.பிற்பட்ட காலப்பகுதியில் தான் அவரின் சமூக உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டிருந்தன.தற்போது அவர் மீண்டும் தனது உணர்வு பூர்வமான செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றார்.இதனை ஆழச் சிந்தித்தால் அவரின் நீண்ட நாள் உறக்கத்திற்கான காரணத்தை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

 

ஒருவர் பிறக்கும் போதே தலைவராக பிறப்பதில்லை.நாம் தான் உருவாக்க வேண்டும்.தற்போதைய மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீமை விட அக் கட்சியின் பிரதித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மிகவும் சிறப்பாக செயற்படுகிறார்.இதனை வைத்து பார்க்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசை மு.காவின் தலைவராக்கினால் மு.கா புதுப்பொலிவுடன் பயணிக்கும் என்ற நம்பிக்கை முஸ்லிம் சமூகத்திடையே தோற்றம் பெற்றுள்ளது.இன்று இலங்கை முஸ்லிம்கள் அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவத்திலிருந்து வெறுப்புற்றே மரத்தைவிட்டும் தூரமாகிச் செல்கின்றனர்.அமைச்சர் ஹக்கீமை மு.காவின் தலைவர் பதவியை விட்டு விலக்கினால் அதற்கு யார் தகுதியானவர்? என்ற வினாவிற்கான பதில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *