இலுப்படிச் சேனை – வெப்ப வெட்டுவான் பிரதேசம் கொம்பர் சேனை பண்டாரக் கட்டு பகுதிகளில் அதிகமான விவசாயிகள் அவர்களுடைய விவசாயத்தினை விதைத்திருந்த போதிலும் உரிய காலத்தில் மழை நீர் கிடைக்காமை காரணமாக உறுகாமத்தில் இருந்து ஓடுகின்ற ஆற்றுநீர் சிறிய வாய்க்கால்கள் மூலமாக இந்த வயல் நிலங்களுக்கு பாய்ச்சப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் தற்போது அந்த வாய்க்கால்கள் முற்றாக மூடப்பட்ட நிலை காணப்படுவதால் விவசாயிகள் தமது வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமை காரணமாக விதைக்கப்பட்ட வயல்கள் அதிக உஷ்ணத்தினால் கருகி போகின்ற நிலைமை காணப்படுகின்றது.
எனவே இப்பிரச்சனையினை உடனடியாக நிவர்த்தி செய்யும் முகமாக (05.12.2016ஆந்திகதி திங்கட்கிழமை) உரிய இடத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அங்குள்ள நிலைமையினை நேரடியாக பார்வையிட்டதோடு நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்களுடன் தொடர்பு கொண்டு இப்பிரச்சனைக்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் இதன்போது அங்கு மழைவேண்டி இடம்பெற்ற விஷேட தொழுகை மற்றும் துஆ பிராத்தனைகளிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டார்.