பிரதான செய்திகள்

“சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டி விண்ணப்பம்” குறித்த புதியதோர் அறிவித்தல்.

எதிர்வரும் 18.12.2016 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுப்போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, 28.01.2017 அன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெறும் “வேரும் விழுதும்” விழாவில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன், பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும் எனவும், மேற்படி அறிவுப் போட்டிக்கான விண்ணப்ப முடிவு திகதியை இன்றுவரை (07.12 .2016) அறிவித்து இருந்தோம்.

ஆயினும் சிலர் தொலைபேசிகள் மூலம் “தமக்கு குறுகிய அவகாசமே கிடைத்து உள்ளதினால், விண்ணப்பங்களை அனுப்ப முடியவில்லையென முறையிட்டு உள்ளனர். நாமும் பத்து தினங்களுக்கு முன்பே அறிவித்தலை விடுத்து இருந்தோம் என்பதை புரிந்து கொண்டு, இதுவரை விண்ணப்பங்களை அனுப்பாதோரும், 18.12.2016 காலை 08.30 க்கு முன்பாக மண்டபத்துக்கு வந்து தங்களை நேரடியாக  பதிவு செய்யலாம் என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம்.  

Related posts

மன்னார் முசலியில் மாணவி விபத்து! மண் அகழ்வு சாரதி

wpengine

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு இந்தியாவில் தடை ..!

Maash

வவுனியா பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள முஸ்லிம்களின் கடைகளை அகற்றும் தமிழ் இனவாதிகள்

wpengine