பிரதான செய்திகள்

முல்லைத்தீவு முன்பள்ளி தேவைகளை கேட்டறிந்த மாகாண சபை உறுப்பினர் சிவநேசன்

கடந்த வாரம் வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் திரு, கந்தையா சிவநேசன் தனது வருடாந்த அபிவிருத்தி மூலதன நன்கொடை நிதிமூலம் செயற்படுத்தப்படுகின்ற திட்டங்களை மேற்பார்வை செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கரைதுறைப்பற்று செயலக பிரிவுக்குட்பட்ட கறுநாட்டுக்கேணி கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

2016ம் ஆண்டிற்குரிய நிதியில் கறுநாட்டுக்கேணி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்துக்கான மின் இணைப்புக்கென ரூபா 30,000/-ம் கறுநாட்டுக்கேணி கற்பக விநாயகர் முன்பள்ளியின் சுற்று வேலி மற்றும் கட்டிடத் திருத்தங்களுக்காக ரூபா 70,000/-ம் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய சென்ற மாகாணசபை உறுப்பினர் முன்பள்ளியின் தரம், தேவைகள் பற்றியும் ஆசிரியையிடம் கேட்டறிந்து கொண்டார். unnamed

Related posts

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து விரல் தேய்ந்துவிட்டது

wpengine

ரோசியா? ஆசாத் சாலியா மோதல்

wpengine

Good Vibes Bot ஊடாக $5 Viber Out credit களை மாதமும் வெற்றியீட்ட முடியும்.

wpengine