Breaking
Sun. Nov 24th, 2024

(இப்றாஹிம் மன்சூர்,கிண்ணியா)

இந்த இரு குழுக்களின் எஜமானர்கள் ஒரே இடத்தில் இருந்து செயற்பாடுகின்றார்களா என்ற உணர்வு ஏற்படுகின்ற பாங்கிலே தான் இந்த நடவடிக்கைகள் காணப்படுகின்றன என நேற்றுமுன் தினம் 21-11-2016ம் திகதி திங்கள் கிழமை கட்டார் பனார் மண்டபத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றியிருந்தார்.இங்கு இரண்டு குழுக்கள் என அமைச்சர் ஹக்கீம் தௌஹீத் ஜமாத் அமைப்பையும் பொது பல சேனா அமைப்பையும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தெரிவிக்கையில்…

“எம்மவர்களுக்கு மத்தியிலும் ஒரு சிலருடைய நடவடிக்கைகள்,அண்மையில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான விடயம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.அந்த இயக்கம் நல்ல நோக்கங்களை அடிப்படையாக வைத்து ஈடுபடுகின்ற இயக்கமாக இருக்கலாம்.ஆனால்,அதன் செயற்பாடுகள் வார்த்தை பிரயோகங்கள் தேவையான விடயத்தை தேவையான நேரத்தில் செய்யாமால் கொஞ்சம் குழப்பகரமான நேரத்தில் அவர்களும் ஆர்ப்பாட்டத்தை கொஞ்சம் பக்குவமில்லாமல் ஈடுபடும் போது பதட்டத்தை இன்னும் அதிகரிக்கின்றது.மற்ற தீவிரவாத குழுக்களை சீண்டி விடுகின்ற விடயமாக என்ற பின்னியில் இந்த இரு குழுக்களின் எஜமானர்கள் ஒரே இடத்தில் இருந்து செயற்படுகின்றார்களா? என்ற உணர்வு ஏற்படுகின்ற பாங்கிலே தான் அமைந்துள்ளன.

அமைச்சர் ஹக்கீமின் பேச்சின் இறுதியில் பொது பல சேனா அமைப்பின் செயற்பாடுகளும் தௌஹீத் ஜமாத்தின் செயற்பாடுகளும் ஒரே வகையில் அமைந்துள்ளன என கூறியதன் மூலம் அவர் இரு அமைப்புகளையும் சரி சமமாக பார்கின்ற விடயத்தை அறிந்து கொள்ளலாம்.பொது பல சேனா தெளிவான இனவாதத்தை கக்கும் ஒரு அமைப்பு.அந்த அமைப்பின் செயற்பாடுகளோடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயற்பாடுகளை ஒப்பிடுவதை எக் காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று தௌஹீத் ஜமாத்தை சேர்ந்த சகோதரர் ராசிக்கின் கைது அநியாயமாகவே பார்க்கப்படுகிறது. மு.காவை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் தவம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ராஹ்மான் ஆகியோர் இதனை பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.இப்படி இருக்கையில் அமைச்சர் ஹக்கீமின் இப் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.15078666_1912111562355516_736079882007466543_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *