(இப்றாஹிம் மன்சூர்)
அமைச்சர் ஹக்கீமின் கட்டார் விஜயமானது முஸ்லிம் புத்திஜீவிகளிடையே பலத்த எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது.
இதனை மூடி மறைக்க அவர்களது ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர் ஹக்கீம் உலக முஸ்லிம்களின் கூட்டமைப்பை சந்திக்கவே சென்றதாக கூறியுள்ளனர்.
அந்த செய்தியில் எந்த உண்மையும் இருப்பதாக அறிய முடியவில்லை.இந்த வதந்தியை பரப்புவர்களில் அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள்.இவர்கள் நன்றாக ஒரு விடயத்தை விளங்கி கொள்ள வேண்டும்.இந்த இன வாதத்தால் வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் உள்ள மக்களே அதிகம் அச்சத்தில் உள்ளனர்.
உங்கள் தாய்,சகோதரி பாதிப்படாமல் இருப்பதால் உங்கள் தலைவரை காப்பாற்ற இந்த விடயத்தில் கூட பொய் கூறி காப்பாற்றுகிறீர்கள்.இந்த மக்களின் பதுவாக்கள் நிச்சயம் உங்களை ஒரு நாள் வந்தடையும்.அந்த நாள் நீங்கள் இதனை சிந்தீர்பீர்கள்.இந்த சாபம் உங்கள் சந்ததி சந்தியாக கடத்தப்படலாம்.
இலங்கையில் இனவாதிகளின் அச்சம் மேலோங்கி காணப்படுகிறது.அமைச்சர் ஹக்கீமோ ஹக்கீமோ கட்டாரில் கனிமூன் கொண்டாடுகிறார்.தற்போது ஜம்மியத்துல் உலமா தலைமையில் இதனை எப்படி கையாள்வதென்ற ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன.இலங்கை முஸ்லிம்களின் அதிகமான வாக்கை பெற்ற அமைச்சர் ஹக்கீம் கட்டாரில் நிற்பதை எந்த வகையில் ஒரு முஸ்லிமால் ஏற்றுக்கொள்ள முடியும்? பொய் கூறி அரசியல் செய்யவும் பல விடயங்கள் உள்ளன.அதில் ஏதாவது செய்து கொள்ளுங்கள்.