பிரதான செய்திகள்

தாஜுடீன் கொலையுடன் பிரபல நபரின் மனைவிக்கு தொடர்பு

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய தற்போது வரையில் மேற்கொண்ட விசாரணைகளில் இதற்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த பிரபலம் ஒருவரின் மனைவி தொடர்புப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் கொலை இடம்பெற்ற தினத்தன்று குறித்த கொலைக்காக வந்த நபர்களுடன் தொடர்புப்பட்டிருந்த முறை தற்போது தெரியவந்துள்ளது.

அது விஞ்ஞான ரீதியான சாட்சிகளுக்கமையே அவர் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் வெளியாகியுள்ளதனை தொடர்ந்து குறித்த பிரபலத்தின் மனைவி பல்வேறு விகாரைகளுக்கு சென்று தீவிர மத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த பெண் உட்பட அவரது முழு குடும்பமும் கொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசாரவுக்கான நீதிமன்றத் தடையுத்தரவு தற்காலிக நீக்கம்

wpengine

வடக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நிலையான கடற்றொழில் அபிவிருத்தி

wpengine

மக்கள் ஆணையை வெற்றிபெற செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை

wpengine