பிரதான செய்திகள்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் ஜேர்மன் கிளையினரின் வாழ்வாதார உதவி

விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் 12.11.2016 சனிக்கிழமையன்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோணாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த திருமதி இரகுநாதன் நாகேஸ்வரி என்பவருக்கு வாழ்வாதார உதவியினை வழங்கியிருந்தனர்.

மறைந்த ஜேர்மன் கிளை உறுப்பினர் கார்த்திகேசு சிவகுமாரன் (தோழர் சுப்பர்)அவர்களின் முதலாம் வருட நினைவையொட்டி இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் வறுமையான நிலையில் சிறிய கடை ஒன்றினை நடாத்திவரும் திருமதி நாகேஸ்வரி அவரது வர்த்தகத்தினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ரூபா 25,000 வழங்கப்பட்டுள்ளது.
கணவரை பிரிந்து வாழும் இவரின் ஒரு பெண்பிள்ளை இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார். இரண்டு மகன்மார் பாடசாலை மாணவராயுள்ளனர். unnamed-2
மேற்படி உதவி வழங்கும் நிகழ்வு ஊற்றுப்புலத்தில் வதியும் தர்மபுரம் மத்திய கல்லூரி அதிபர் திரு. எஸ்.முருகானந்தனின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. unnamed-1

Related posts

சிறுபான்மை இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உப ஜனாதிபதி முறை தேவை;மனோ

wpengine

மன்னாரில் கற்றாழை செடிகள் சட்ட விரோதமான முறையில் அகழ்வு! நடவடிக்கை எடுக்கப்படுமா

wpengine

வர்த்தகமானி அறிவித்தல் வெளிவந்தால் 19ஆம் திகதி தேர்தல் மஹிந்த

wpengine