பிரதான செய்திகள்

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் திருட்டு சம்பவம்

(அனா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சவுக்கடி கடற்கரையில் வைத்து கடந்த 2016.02.08ம் திகதி திருடப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தீர்க்கப்படாத குற்றச்செயல்கள் விசாரணைப்பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.

கடந்த 2016.02.08ம்; திகதி சவுக்கடி கடற்கரையில் வைத்து நுP – ஏனுP – 9551 என்ற இலக்கம் கொண்ட பல்சர் மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தீர்க்கப்படாத குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மைலம்பாவலிப் பிரதேசத்தைச்சேர்ந்த 26 மற்றும் 40 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் பெற்ற வாக்கு மூலத்திற்கு அமைய ஆரயம்பதியில் அமைந்துள்ள வாகன உரிதிபாகங்களை விற்பனை செய்யும் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளின் உதிரிப்பாகங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.

கைது செய்யயப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மனிதாபிமானம் அற்றவர்கள் மின்சார சபை ஊழியர்! அமைச்சர் கண்டனம்

wpengine

இன்று முதல் பயணிகள் பஸ்களில் இடம்பெறும் மாற்றம்!

Editor

10 மணிநேர போராட்டம், வசமாக சிக்கிய மோசமான ஜோடி.

Maash