அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட வரவு – செலவு திட்டமொன்றை நாட்டு மக்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி எதிர்பார்க்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கொழும்பில் நேற்று சந்தித்து உரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது தேசிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டம், அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் நாட்டை எவ்வாறு அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வது போன்ற விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஊடகங்களுக்குமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, கருத்து வெளியிடுகையில்;
நாட்டு மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய வரவு – செலவு திட்டமொன்றை கொண்டு வருவது தொடர்பில் நிதி அமைச்சருடன் இன்று (நேற்று) பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இம்முறை சிறந்ததொரு வரவு – செலவு திட்டத்தை எதிர்பார்க்க முடியும் என நம்புகின்றோம்.
அந்த வரவு – செலவு திட்டமானது சகலரும் மகிழ்ச்சியடையக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும். குறிப்பாக உள்நாட்டில் சிறந்ததொரு அபிவிருத்தியை முன்னெடுக்க வழிவகுக்கும் வரவு – செலவு திட்டமாக அமைய வேண்டும். இது தொடர்பிலேயே நிதி அமைச்சருடனும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதனால் எதிர்வரும் 10 ஆம்தி கதி சிறந்ததொரு வரவு–செலவு திட்டத்தை மக்கள் எதிர்பார்க்க முடியும் என்றார்.
ரவி கருணாநாயக்க பேச்சுவார்த்தையின் நிறைவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கான வரவு – செலவு திட்டமொன்றை முன்வைப்பதற்கு எதிர்பார்க்கின் றோம். இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். தொடர்ச்சியாக அனைத்து தரப்பினருடனும் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்கமையவே தற்போது முன்னாள் ஜனா திபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம் என்றார்.