பிரதான செய்திகள்

மன்னார் -வங்காலை ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்பு: 5பேர் கைது

மன்னார்-வங்காலை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 5 பேரை மன்னார் பொலிஸார் நேற்று (7) காலை கைது செய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட குறித்த ஹெரோயின் போதைப் பொருட்கள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியென மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி போதைப் பொருட்களின் நிறை 2 கிலோ கிராம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Related posts

வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதம்.

wpengine

ஆறு கைதிகளை சொந்த செலவில் விடுதலை செய்த ஹிஸ்புல்லாஹ்

wpengine

கருணா மற்றும் பிள்ளையான் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பில் எந்தவித தகவலையும் வழங்கவில்லை.

Maash