யுத்தத்தை முடித்த மஹிந்த ராஜபக்ஷவையோ எமது படையினரையோ காட்டிக் கொடுக்கமாட்டோம். அனைவரையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளா என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பொது ஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் சொந்த ஊரான அங்குணுகொல பெலஸ்ஸவில் இடம்பெற்ற வரவேற்புக் கூட்டங்களில் உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்திருப்பதாவது,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஆதரவாளார்களினதும் நன்மை கருதியே ஐ.தே.கட்சியுடன் இணைந்துள்ளோம். தவிர சிறப்புரிமைகளுக்காக அல்ல.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியை 2020 இல் ஏற்படுத்துவதே எமது இலக்காகும்.
தமிழ் முஸ்லிம் மற்றும் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.