பிரதான செய்திகள்

மன்சூர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் “இது பௌத்தநாடு,அவர்கள் விரும்பிய இடங்களில் சிலைகளை வைக்கலாம்.அதற்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை.அதனை எந்த ராசாவாலும் அகற்ற முடியாது” எனக் கூறியுள்ளதனூடாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மனங்களையும் காயப்படுத்தியுள்ளார்.இப்படியான பேச்சுக்களை பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரது வாய்களில் இருந்து கூட அவதானிக்க முடியவில்லை.இப்படியான ஒருவருக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஒவ்வொருவரும் தவறான பிரதிநிதியை தெரிவு  செய்ததற்காக வேண்டி இறைவனிடம் எவ்வாறு பதில் சொல்லப் போகிறார்கள்? தனக்கு வாக்களித்த மக்களை அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாத நிலைக்கு தள்ளிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அந்த மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.

இவர் கதைத்த வீடியோ பகிரங்கமாக வெளியாகியிருந்தும் அதனை நம்ப மறுக்கு அப்பாவி முஸ்லிம் கொங்கிரஸ் போராளிகளைப் பார்த்து பரிதாபம் வருகின்றதே தவிர கோபம் வரவில்லை.இதனை மறுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை.மக்களை மடையனாக்கும் அரசியல் வியாபாரம் செய்வதில் முஸ்லிம் கொங்கிரசை சேர்ந்தவர்கள் கில்லாடிகலென்பதை மக்கள் நன்கு அறிந்துகொண்டனர்.

அமைச்சர் றிஷாத் சம்மாந்துறையில் கைத் தொழில் பேட்டையை அமைக்க வேண்டி முயற்சித்த போது சாரனை உயர்த்தி கட்டி போராடி வெற்றி பெற்ற மன்சூரிற்கு சிலை விடயத்தில் வெற்றி பெற முடியவில்லை.முஸ்லிம் மக்களுக்கு நலவை கொண்டுவருவதை தடுக்கின்றார்.கெடுதியை உண்டாக்குவதை அனுமதிக்கின்றார்.வைத்ததை தடுக்க முடியவில்லை.அதனை அகற்றவாவது திடகங்கத்துடன் உறுதி பூண்டு முயற்சிக்கலாம் அல்லவா? அவர் இது தொடர்பில் வழங்கியுள்ள பேட்டியின் இறுதியில் தேவைப்பட்டால் இச் சிலையை அகற்றுவதற்கு முன்னின்று உழைக்க சித்தமாகவுள்ளேன் எனக் கூறியுள்ளார்.தேவையென்றால் எனும் வார்த்தை இங்கு மிகவும் அவதானமாக பார்க்க வேண்டிய ஒரு வார்த்தையாகும்.அதாவது இச் சிலையை அகற்ற வேண்டிய தேவையை இன்னும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் உணரவில்லை என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அண்மையில் அவர் படம் காட்டிய நீர்பாசன அபிவிருத்தி நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் குறித்த அமைச்சிடமிருந்து ஒதுக்கப்படும் நிதியாகும்.இதனை இவர் கொண்டு வந்ததாக மக்களை நம்ப வைத்து தனது மதிப்பை நிலை நிறுத்த முயற்சித்தார்.இதனை இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரால் மறுக்க முடியுமா? அவர் அடிக்கல் நாட்டிய ஹமீடியாஸ் நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலை வேலைகளை காணவில்லை.அவர் நாட்டிய அடிக்கல் எதுவும் இன்று கட்டடமாய் முளைக்கவில்லை.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களே!

நீங்கள் நல்லது செய்யாது போனாலும் அதனை தடுக்க வேண்டாம்.கெடுதிக்கு துணை போகவும் வேண்டாமென ஒரு மக்கள் தொண்டனாய் கேட்டுக்கொள்கிறேன்.

இப்றாஹிம் மன்சூர்

ஆசிரியர்

கிண்ணியா

Related posts

வவுனியா கல்லூரியில் வாணிவிழா

wpengine

தனிப்பட்ட காரணத்திற்காக பணிப்பாளர் நாயகம் ஹிஷினி பதவி விலகல்

wpengine

அமைச்சர் றிஷாட்டை பேஸ்புக்கில் விமர்சனம் செய்ய! ஊடக மாபியாக்களை கூட்டிசெல்லும் ஹக்கீம்

wpengine