பிரதான செய்திகள்

பாகிஸ்தான் வீடமைப்புத் திட்டத்தைப் பார்வையிட அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து தூதுவர் மன்னாருக்கு விஜயம்.

(ஊடகப்பிரிவு)

இடம்பெயர்ந்து 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் மன்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத் தேவைக்காக பாகிஸ்தான் அரசாங்கம் அமைத்து வரும்
வீடமைப்பு உதவிகளுக்காக அந்த நாட்டு அரசாங்கத்துக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேற்று (05) தனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார்.

மன்னாருக்கு  அமைச்சருடன் விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் உயர்தானிகர் மேஜர் ஜெனரல் ஷெய்ட் ஷகீல் ஹூஸைன் மன்னார் புதுக்குடியிருப்பில் தனது நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியினால் அமைக்கப்பட்டு வரும் வீடுகளைப் பார்வையிட்ட பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் உரையாற்றினார்.

பாகிஸ்தான் தூதுவருக்கு தனது பிரத்தியேக நன்றிகளை தெரிவித்துக் கொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,
பாகிஸ்தான் இலங்கையுடன் மிக நெருக்கமான நட்புறவைக் கொண்ட நாடு.

இலங்கையின் அயல் நாடான பாகிஸ்தான் எமது நாடடுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி நல்கி வருகிறது.

அத்துடன் இலங்கை துன்பகரமான சூழ்நிலைகளில் இருந்த காலங்களில் அந்நாடு எமக்கு கைகொடுத்து உதவியுள்ளது.

26 ஆண்டு காலம் புத்தளத்திலும் தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அகதிகளாக வாழ்நத இந்த மக்களின் இருப்பிடத் தேவைக்கு வீடுகள் தேவைப்படுகின்றன அந்த வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய நிதி உதவியில் 230 வீடுகள   அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 200 வீடுகள் முஸ்லிம்களுக்கும் 20 வீடுகள் தமிழர்களுக்கும் 10 வீடுகள் சிங்களவர்களுக்கும் வழங்கப்பட்டுளள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

பாகிஸ்தான் தூதுவர் அமைச்சருடன் இணைந்து புதுக்குடியிருப்பு கோணார் பண்ணையில் சவூதி தனவந்தரின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள மர்கஸ் அல் இஸ்லாமியா பள்ளிவாசலுக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்ததார். முன்னதாக அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும் உரையாற்றினார்.

புதுக்குடியிருப்பில் அறபு மத்ரசா ஒன்றுக்கு விஜயம் செய்த போது அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் நிர்வாகத்தின்ர் எடுத்துரைத்தனர்.unnamed

பின்னர் நானாட்டான் பிரிவில் சிங்கள, தமிழ் மக்களுக்கு அமைக்கப்பட்டுவரும் வீடுகளையும் அவர் பார்வையிட்டார்.unnamed-3

இந்த நிகழ்வுகளில் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச செயலாளர் வசந்தகுமார், நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.unnamed-2

Related posts

விக்னேஸ்வரனின் தீர்வு வழங்கப்பட்டால்! முஸ்லிம்கள் சொந்த வீட்டில் அகதிகளாக நேரிடும்!

wpengine

இஸ்லாம் அன்பின் மார்க்கம் -ஒப்புக்கொண்ட போப் (விடியோ)

wpengine

மன்னார்-அரிப்பு திருட்டு சம்பவம் பிடிபட்ட கடற்படையினர்! இருவர் வைத்தியசாலை

wpengine