Breaking
Sun. Nov 24th, 2024

( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )

இன்றைய நவீன காலத்தின் நவீன தொழிநுட்ப சாதனங்களின் வருகையினால் பல சொல்ல முடியா கேவலம் கெட்ட செயல்கள் இந்த உலகத்தில் நடந்த வன்னமே உள்ளன.

இந்த ஆபத்தான கட்டத்தில் பெற்றோர்கள் கவனமாக தங்களது பிள்ளைகளை பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம்! ஏன் என்றால் இன்று சிறுபிள்ளைகள் கூட காதல் என்ற அன்னியர்களின் வலையில் சிக்கி எமது முஸ்லிம் சமுதாயத்தின் புனிதத் தன்மையினை இழக்கச் செய்கின்றனர் அது மாத்திரம் அன்றி பெற்றோரின் மானத்தை சந்தி சிரிக்க வைக்கின்றனர் குடும்ப மானத்தை காற்றில் பறக்க விடுகின்றனர் இதுவெல்லாம் எப்படி நடக்கிரது இதர்க்கு யார் காரணம் ?

நான் என் கண்கலால் கண்ட சில காட்சிகள் தான் இன்று என்னை இப்படி எழுத வைக்கின்றது.

கடந்த சில நாட்களுக்க முன்னர் எனது வேலையினை முடித்து விட்டு வீடு செல்லும் வழியில் ஓர் அதிர்ச்சி தரக்கூடிய விடையம் ஒன்றை பார்த்தேன் அந்த நேரம் பாடசாலை விடுகிர நேரம் மாணவர்கள் சென்று கொண்டு இருக்கையில் யாரும் அற்ற ஒரு வீதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க பென் பிள்ளை பாடசலை உடையுடன் நிற்கிறால் அதே வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிலில் நிற்கிரார் அவர் ஏதோ ஒன்றை பிள்ளையிடம் கொடுக்க பிள்ளை வேணாம் என்று சொல்ல அவர் பிள்ளையின் கையினை பிடித்து சில்மிசம் செய்கிரார் இதர்க்கு வீதியில் யாரும் வருகிரார்களா என்று பார்க்க நான்கு தோழிகள் காவல் காக்கின்றனர் என்ன உலகம் இது பெற்றோர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர் எனது பிள்ளை பாடசாலை சென்று வருவால் என்று பாவம் அப்பாவி பெற்றோர்கள் ! அவர்களுக்க என்ன தெரியும் 

இன்னும் சில விடையங்களைப் பாருங்கள் காலை மாலை நேர வகுப்புகளுக்கு செல்லும் பிள்ளைகளின் ஒரு சில அய்யோ அது படு கேவலம் பா ..!

பாடசாலை தவிர்த பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக சொல்லி விட்டு அங்கு சென்று தனது அந்தரங்க காதலனோடு சற்று கூட வெட்கம் இல்லாமல் தங்களது குடும்பத்தின் மான மரியாதை என்னவாகும் என்ற கவலை சற்று கூட இல்லாமல் தனது காதலேனாடு மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டு பீச்சுக்கு போறாங்க இதை யார் பார்ப்பது .

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை பெற்றோர்கள் எடுக்க தவறினால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாலாய் போய் விடும் .

பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மீது அதிக அன்பு கொண்டு எனது பிள்ளை இப்படியான வேலைகளை செய்யமாட்டால் என பாராமுகமாக இருந்து விடாமல் சற்று பிள்ளையின் மீது கண்காணிப்பாக இருந்து கொள்ளுங்கள் நமது பிள்ளைகள் நல்லவர்கள் தான் ஆனால் நாம் வாழும் சமுகம் மிக போராடி வாழவேண்டிய சமுகம்இதை நீங்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் .

எப்படி எமது பிள்ளைகளை கண்கானிப்பாக பார்த்துக் கொள்வது

முதலாவதாக எமது பிள்ளையின் அன்றாட நடவடிக்கையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என பாருங்கள் இது கட்டாயம் ஏன் என்றால் இதர்க்கு முன்னர் இருந்ததை விட அதிகமாக தங்களை அழகு படுத்திக் கொள்வார்கள்

பாடசாலை அல்லது பகுதி நேர வகுப்பிற்கு வழமைக்கு மாற்றமாக நேரத்தோடு செல்வார்கள்

அதிகமாக காதல் பாடல்களை கேற்பார்கள்

உங்களது பிள்ளைகளுக்கு தனியான பொருட்கள் வைக்கும் இடம் இருந்தால் அதனை அடிக்கடி பாருங்கள் எமது பிள்ளை தானே அவர்கள் நன்றாக வழர வேண்டும் அதுதானே எமக்க வேண்டும்

பிள்ளைகளை நீங்களே பாடசாலை அல்லது பகுதி நேர வகுப்பிற்கு அழைத்துச் செல்லுங்கள் இது மிகச்சிறந்தது

உங்களது பிள்ளைகளை சந்தேகப்பட சொல்ல வில்லை மாறாக சற்று கண்கானிப்பாக இருங்கள் என்று சொல்கிறேன் ……..

இறைவன் துனை

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *