Breaking
Sun. Nov 24th, 2024

(பிராந்திய செய்தியாளர்)

மன்னார் முசலி பிரதேசத்துக்குட்பட்ட அரிப்பு கிராமத்தில்  இரு கடற்படையைச் சார்ந்தவர்களை தாக்கியதாக மன்றில் ஆஐராக்கப்பட்ட அரிப்பு கிராமத்தைச் சார்ந்த ஆறு சந்தேக நபர்களும் நேற்றுமுன் தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியபோது நான்கு பேர் வேறு சாட்சிகளால் அடையாளம் காட்டபட்டபோதும் இருவர் அடையாளம் காட்டப்படவில்லை.

அத்துடன் சந்தேக நபர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பொழுது சிறைச்சாலை அதிகாரிகளால் கையடக்க தொலைபேசி கமராவினால் இவர்களை புகைப்படம் எடுத்தமைக்கு சிறைச்சாலை பணிப்பாளரிடம் மன்று விளக்கம் கோரியுள்ளது.

மன்னார் முசலி பிரிவிலுள்ள அரிப்பு கிராமத்தில் கடந்த 18.10.2016 செவ்வாய் கிழமை இரவு அப்பகுதி கடற்படையைச் சார்ந்த இரு சந்தேக நபர்கள் அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கொள்ளையிடும் நோக்கத்துக்காக வீட்டுக்குள் உட்புக முயன்றதாக தெரிவித்து அவ் கிராம மக்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இரு கடற்படையிரையும் தாக்கிய குற்றம் சம்பந்தமாக அரிப்பு கிராமத்தைச் சார்ந்த சந்தேக நபர்கள் ஆறு பேரை சிலாபத்துறை பொலிசார் கைது செய்து 21.10.2016)  வெளியார் கண்டு கொள்ளாத முறையில் அவர்களின் முகங்களை மூடிய நிலையில் மன்னார் நீதிமன்றுக்கு அழைத்து வந்திருந்தனர்.

இவர்களை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh முன்னிலையில் ஆஐராக்கியபோது இவர்களை அடையாள அணிவகுப்புக்காக  24.10.2016 வரை சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்க நீதவான் கட்டளைப் பிறப்பித்திருந்தார்.

இதற்கமைய மீண்டும் இவர்கள் கடந்த 24.10.2016 அன்று சிறைச்சாலை அதிகாரிகளால் மூடப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு  இவ் சந்தேக நபர்களை மன்னார் நீதிமன்றில் ஆ.கி.அலெக்ஸ்ராஐ முன்னிலையில் நீதிபதியின் அறையில் ஆஐர் செய்திருந்தனர்.

அப்பொழுது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு  உட்படுத்தும்படி சந்தேக நபர்கள் சார்பாக ஆஐராகியிருந்த சட்டத்தரனிகள் நீதிபதியின் முன்னிலையில் வாதத்தை முன்வைத்தபோதும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் இரு கடற்படையினரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பாதிப்புக்குள்ளான நபர்கள் சார்பாக ஆஐரான சட்டத்தரனி அப்பொழுது நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இவ் வழக்கு கடந்த 27.10.2016 வியாழக் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று இவ் வழக்கு விசாரனைக்காக சந்தேக நபர்கள் மூடப்பட்ட நிலையில் மன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.

விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மன்றின் கதவுகள் யன்னல்கள் மூடப்பட்ட நிலையில் மன்னார் பதில் நீதவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களை அடையாளம் காண்பிப்பதற்காக தாக்குதலுக்கு உள்ளான இருவருடன் மேலும் மூன்று சாட்சிகளான கடப்படையினரும் ஈடுபட்டனர். ஆனால் இதில் இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை. நான்கு பேர் வேறு சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இவ் வழக்கு மீண்டும் மன்னார் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh முன்னிலையில் திறந்த மன்றில் விசானைக்கு எடுக்கப்பட்டபோது பொலிசார் மன்றில் சமர்பித்த பி அறிக்கையில் மேலும் மூவரை தாங்கள் கைது செய்து விசாரனை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆகவே அதுவரைக்கும் இவ் சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்கும்படியும் அத்துடன் இவர்களையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் நிலவும் என தெரிவித்திருந்தனர்.

இதற்கு சந்தேக நபர்கள் சார்பாக ஆஐராகிய சட்டத்தரனிகள் மன்றில் தெரிவிக்கையில் பொலிசாரின் பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சந்தேக நபர்களை நாங்கள் மன்றில் முன்னிலைப் படுத்தவதற்காக பொது மக்கள் முன்னிலையில் அழைத்து வந்துள்ளோம். அத்துடன் இங்கு அடையாளம் காட்டப்பட்டவர்களும் வௌ;வேறு சாட்சிகளாலேயே அடையானம் காட்டப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு அடையாள அணிவகுப்புத் தேவையற்றது என சந்தேக நபர்கள் சார்பாக ஆஐரான சட்டத்தரனி மன்றில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி; அலெக்ஸ்ராஐh சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கட்டளையிடுகையில் கண்டு கொள்ளாத்தன்மையில் மூடப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை மன்றில் ஆஐராக்கும்படி கட்டளைப்பிறப்பித்து சற்று நேரம் இவ் வழக்கை ஒத்திவைத்து மீண்டும் விசாரனைக்கு எடுக்கப்பட்டது.

அப்பொழுது விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து சந்தேக நபர்களுடன் சட்டத்தரனிகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூன்று பேருடன் ஒன்பது சந்தேக நபர்கள் இவ் வழக்கில் ஆஐர்படுத்தப்பட்டனர்.

அப்பொழுது நீதிபதி இரு பக்கங்களின் விவாதங்களையும் கருத்திற் கொண்டு தெரிவிக்கையில் பிரச்சனைக்குரிய இடத்திலுள்ள கடற்படையினர் அப்பகுதி மக்களுடன் சுமூகமாக இருந்து வருவது தெரிய வருகிறது ஆகவே சாட்சிகளுக்கு சந்தேக நபர்களால் பாதிப்பு வரும் என்பது மன்று ஏற்றுக் கொள்ளமுடியாது. அத்துடன் இவர்கள் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கும் கடற்படையினருக்கும் முறுகல் நிலை ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம்

அத்துடன் நிரபராதிகள் தண்டனை பெறக்கூடாது. சந்தேக நபர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தபொழுது சிறைச்சாலை அதிகாரிகளால் தொலைபேசி கமராவினால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளனர் என மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் இது விடயமாக சிறைச்சாலை பணிப்பாளர் மன்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

சந்தேக நபர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பினையில் விடுவிக்கப்படுவதுடன் இவர்களை அவர்களின் பெற்றோர் அல்லது சகோதர்களே பிணையில் அழைத்துச் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் சந்தேக நபர்கள் சிலாபத்துறை பொலிசில் கையொப்பம் இட வேண்டும்

மேலும் இவர்கள் எக் காரணம் கொண்டும் வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாது என குடிவரவு குடியகள்வு திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைய சந்தேக நபர்கள் ஒன்பது பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பாக சிரேஷ;ட சட்டத்தரனிகள் அன்ரன் புனிதநாயகம்இ எஸ்.செபநேசன் லோகுஇ மற்றும் அ.வி.அர்ஐனும் பாதிப்படைந்தவர்கள் சார்பாக சட்டத்தரனி இரோசன் பஸ்நாயக்கா ஆகியோர் ஆஐராகியிருந்தனர்.

இவ் வழக்கு மீண்டும் எதிர்வரும் 08.12.2016 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *