பிரதான செய்திகள்

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தேசிய தின விழா வவுனியாவில்

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் வாரம், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் இன்று 14 – 20 வரை நாடெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த வாரத்தை முன்னிட்டு வவுனியா காமினி மஹா வித்தியாலயத்தில், எதிர்வரும் 15 ஆம் திகதி நுகர்வோர் தின கூட்டத்தை நடாத்துவதற்கு கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். 12814391_242482019425398_7156554082384458061_n

இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
அத்துடன் நாடெங்குமுள்ள சுமார் ஆறாயிரம் கடைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள், விஷேட விலைக்கழிவுகளுடனான சலுகைகளில் நுகர்வோருக்கு வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.12250_242482059425394_3579428761782775052_n

Related posts

சூழ்ச்சிகளினால் சூனியமாகும் தமிழர்களின் அந்தஸ்து

wpengine

சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிக்க நவீன பொறிமுறை தேவை- அமீர் அலி

wpengine

தமிழ் கூட்டமைப்பு இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம்

wpengine