Breaking
Sun. Nov 24th, 2024

(எம்.ரீ. ஹைதர் அலி)

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் காணப்படும் தகவல் தொழிநுட்பம், ஆரம்பக்கல்வி,சித்திரம், சங்கீதம், நடனம் நாடகமும் அரங்கமும், பௌத்த நாகரீகம், விவசாயம், சிங்களம், உடற்கல்வி, வரலாறும் குடியுரிமைக் கல்வியும், இரண்டாம் மொழி சிங்களம் மற்றும் இரண்டாம் மொழி தமிழ் போன்ற பாடங்களுக்கு வெற்றிடங்களுக்காக கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நோக்குடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இதற்கான பரீட்சை 2016.1022ஆந்திகதி (சனிக்கிழமை) முடிவுற்ற நிலையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் கோரப்படும் விண்ணப்பதாரிகளுக்கான வினாப்பத்திரத்தில் கல்வி தொடர்பான பொது அறிவு மற்றும் தேசிய கொள்கை தொடர்பான கல்வி சம்மந்தப்பட்ட விளக்கம் போன்ற கேள்விகள் உள்ளடக்கமாக சொல்லிவிட்டு அவற்றுக்கு மாற்றமாக இரண்டு கல்வி சார்ந்த இரண்டு வினாக்களை மாத்திரமே உள்ளடக்கிய நிலையில் மிகுதியாகவுள்ள அணைத்து வினாக்களும் சுற்று நிருபத்திற்கு மாற்றமாக பொது வினாக்களே அதிகமாக வினாப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நேற்று பரீட்சை எழுதிய கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த அனைத்து பட்டதாரிகளையும் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஏமாற்றியுள்ளதாக பரீட்சார்த்திகள் விசனம் தெரிவிக்கினறனர். இது விடயமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.எம். அன்வரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு நியமனம் தொடர்பில் பல தவறுகளை தொடர்ந்து செய்து வருவதாகவும், கடந்த பட்டதாரிகள் நியமனத்தின்போதும் அநீதி இழைக்கபட்டதாகவும் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்தார்.

மேலும், இது விடயமாக கிழக்கு மாகாண முதலமைச்சர்  நசீர் அஹமட் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி ஆகியோருக்கு தெரிவித்திருப்பதாகவும், எதிர்வரும் மாகாண சபை அமர்வின்போது நடைபெற்ற பரீட்சையினை இரத்துச் செய்து மீண்டும் முறையான பரீட்சை நடாத்தி உள்வாங்க நடவடிக்கை எடுக்க கோரி அவசர பிரேரணை ஒன்றினையும் முன்வைக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *