பிரதான செய்திகள்

மீனவர் பிரச்சினை! கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரி உடனடி இடமாற்றம்

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் மஞ்சுள உடுமாலகல, புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கற்பிட்டி – குறிஞ்சாங்குளம் பகுதியில் மீனவர்கள் நேற்றைய தினம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாகவே இந்த இடமாற்றம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே இந்த இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பிரதி பொலிஸ்மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறு வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டதோடு, கற்பிட்டி வரையான புத்தளம் வீதி மூடப்பட்டிருந்தது.

Related posts

ஒரு நாடு; ஒரே சட்டம் கோத்தாவின் விளக்கம்

wpengine

2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இறுதி நிலை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க தீர்மானம்!

Editor

மன்னாரில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்து ஆலயம் கண்டுபிடிப்பு

wpengine