Breaking
Mon. Nov 25th, 2024

(கரீம் ஏ.மிஸ்காத்)

றீட்டா ஐஷாக் நாடியாவை புத்தளவாழ் யாழ்- கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூக ஒன்றியம், தமது இருபத்தாறு வருட அகதி  நிலைபற்றி எடுத்துரைத்துள்ளனர்.

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சிவில்சார் சமூகம் சர்பாக இவர்களின் சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை வந்துள்ள  ஐ. நா. சபையின் விஷேட அதிகாரியான றீட்டா ஐஷாக் நாடியாவிடம்  இப்பிரதிநிகள் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

சிறுபான்மையினரின் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர் நோக்கும் நெருக்கடிகளையும் ஆராய்ந்து,
அடுத்த வருடம் மார்ச்சு மாதமளவில் ஐக்கி நாடுகள் சபை பேரவை மகாநாட்டில் இலங்கையின் சிறுபான்மையினரின் நிலைபற்றி கூறவுள்ளார்.

எனவே காலத்தின் தேவைகருதியும் எமது சமூகத்தின் உண்மைநிலையையும் எடுத்துக் கூறவேண்டிய இன்றைய காலகட்டத்தில், இதற்கான சந்தர்ப்பம். சிவில் சமூகம் சந்திக்கும் வாய்ப்பு நேற்று காலை ஒன்பது மணிதொடக்ம் பத்துமணி வரையில் கொழும்பு ஐ.நா. காரியாளயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் புத்தளவாழ் யாழ்- கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனத்தின்
தலைவர் அஷ்ஷேக் அப்துல் மலிக்,  செயலாளர் ஹஸன் பைறூஸ் ஆசிரியர்,
ஏனைய கௌரவ உறுப்பினர்களான பொறியியலாளர் எம்.ஐ .எம்.நஹீப், எம்.ஐ.ஹலீம்டீன், எம். நிலாம், ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதில் மீள் குடியேற்றத்தின் சவால்களான:

1. காணிப்பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை, வாழ்வாதாரப்பிரச்சினை

2 . நிர்வாகரீதியாக எதிர் நோக்கும் ஓரங்கட்டப்படுதலும், கதவடைப்புகளும்

3. காணிச்சசுவீகரிப்பு நிகழ்வுகளும், அபகரிப்புக்களும்

4. காணியில்லாதவர்களுக்கான அரச காணி வழங்குவதில் காலந்தால்தளும், பெய்யான குற்றச்சாட்டுக்களினூடாக உரிமை மறுக்கப்படலும்

5. மீள் குடியேற்றம் செய்யப்படாமல் எல்லை நிர்ணயம் செய்யப்டுதலும்

6. வாக்காளர் இடாப்பு பதிவதிலுள்ள இடர்பாடுகள்

7.மீண்டும் மீண்டும் மீள் குடியேற்றப்பதிவுகள் பதியப்படுவதோடு எல்லாம் கணக்கு எடுக்கபடுகிறதே தவிர மீள்குடியேற்ற கொடுப்பனவு கிடைப்பதில்லை.

8 . அரச நிர்வாகத்தினரின் இனவாத மனோபாவநிலையும் இல்லாமலாக்கும் நடைமுறைகளும்

9.வடமாகாண சபையினூடைய போக்கும், முஸலீம்களின் மீதுள்ள கரிசனையும்

10. அசையும் அசையா நஷ்டஈடுகள் தொடர்பாக

11. புதிய அரசியல் யாப்பில் முஸலீம்களின் பாராளுமன்ற இருப்பும் அதன் பாதுகாப்பும் முறையாக பேணுவதில் உள்ள பாதக சூழல்

12. முஸ்லீம்களின் சரியாச்சட்டம் பேணப்பட வேண்டிய அவசியம்

13. முஸ்லீம் கலாச்சார சூழல்பேணப்படவேண்டிய அவசியம்

14. பௌத்த வாத கடும் போக்கால் ஏற்பட்டுள்ள அச்சுருத்தல்களும் நஷ்டங்களும், இதுவரை காத்திரமான நஷ்டஈடுதொடர்பாகவும்.

15.  அத்துடன் தொடரந்தும் அகதியாக வாழும் சூழல் நிலவும் நிலை.

16 .மேலும் நாங்கள் அகதியாக வாழும் பகுதியினர் எதிர் நோக்கும் சவால்களும் பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டன.

போன்ற விடயங்கள் மகஜரில் உள்ளடக்கப்பட்டிருந்தன.unnamed-9

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *