பிரதான செய்திகள்

அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை ஆய்வு கூடத்தை திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சினால் மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் எம்.வை.மாஹீர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு இவ்வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 180 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை அடைந்த மாணவன் எச்.ஹினான் அஹமட் மற்றும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்கும் அமைச்சர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.625-0-560-320-160-600-053-800-668-160-90-1

மேலும் கடந்த வருடம் இடம் பெற்ற உயர்தர பரீட்சையில் முதல் நிலை வகித்த மாணவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.625-0-560-320-160-600-053-800-668-160-90

Related posts

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் பிரதிநிதிகள் சந்திப்பு

wpengine

ஐ போன் 6 வெடித்தால் ஏற்பட்ட விபரீதம்! நிங்களும் கவனம்

wpengine

மாளிக்கைக்காடு ஸகாத் வினியோக நிகழ்வு

wpengine