வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், போகக்கூடாது ஒரு இடம், மொபைல் கஸ்டமர் கேர். மதன் பாபு போல், சிரித்துக்கொண்டே இருக்கும் நம்மைக்கூட கடும் கோபத்திற்கு ஆளாக்கிவிடுவார்கள். எவ்வளவு கடுப்பு ஆனாலும், மொபைல் நம் கைக்கு வரும் வரை, அமைதியாகவே இருப்போம். ஆனால், பிரான்ஸ் நாட்டு ஆசாமி ஒருவர் செய்த செயல் தான் இப்போதைய உலக லெவல் வைரல்.
பிரான்ஸின் டிஜொன் நகரில் இருக்கும் ஒரு ஆப்பிள் ஸ்டோருக்குள் நுழைந்து இருக்கிறார் ஒரு வாடிக்கையாளர்.அங்கு டிஸ்பிளேவுக்கு வைக்கப்பட்ட ஐபோன் மொபைல்களை எடுத்து உடைத்து இருக்கிறார்.
அவரது மொபைலின் வாரன்ட்டி இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டதால், அதற்கு சர்வீஸ் செய்ய முடியாது என மறுத்துவிட்டதாம் ஆப்பிள் நிறுவனம்.அந்தக் கடுப்பில் தான் கடையில் இருந்த அனைத்து மொபைல்களையும் உடைத்து எறிந்துவிட்டார்.
நாமெல்லாம் எவ்வளவோ நல்லவ்வங்கன்னு இனியாவது கஸ்டமர் கேர் நண்பர்கள் புரிஞ்சுப்பாங்கன்னு நம்புவோம்