Breaking
Sun. Nov 24th, 2024

(எம்.எச்.எம்.இப்ராஹிம்,கல்முனை)

திருமதி.சந்திரிக்கா குமாரதுங்கா அவர்களின் அரசாங்கத்தில் (6) வருடங்கள் அமைச்சராக இருந்த எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள், 2001 டிசம்பர் மாதம் 05ந் திகதி பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக தீவிரமாக களமிறங்கி செயல்பட்டகாலத்தில், கல்முனையில் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பங்குபற்றுவதற்காக, (16.10.2000ல்) கெலிகப்டர் ஒன்றின் மூலம் கொழும்பிலிருந்து,கல்முனைக்கு பயணம் செய்தார்.

 

இவருடன் மேலும் இரு வேட்பாளர்களான கதிர்காமத்தம்பி என்பவருடன் அவரின் நண்பரென கூறப்பட்ட கொழும்பு துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஒருவருடன் சேர்த்து (12)பேர் அவ் விமானத்தில் பயணம் செய்தனர்.

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க எனுமிடத்தில், சனிக்கிழமை காலை(9.00)மணியளவில் அந்த கெலிகப்டர் ஆகாயத்தில் சிதறி வெடித்தது.

கதிர்காமத்தம்பியின் நண்பர் என கூறிக்கொள்ளும் அந்த மர்ம நபரே குண்டுவெடிப்பை மேற்கொண்டதாகவும், அவர் புலிகளினால் அனுப்பப்பட்ட கொலையாளி என்பதும் பின்னர் வெளியான செய்திகளாகும். அவர்தான் குண்டை வெடிக்கச்செய்து இந்த கொலையை நிகழ்த்தினார் என்றும்,பின் நாளில் செய்திகள் வெளியாகின.

அந்த மரணம் தொடர்பாக எந்தவித விசாரணையும் மேற் கொள்ளாமல், அந்த படுகொலைக்கு நஸ்டஈடு வழங்கியமையே,  அந்த விபத்துக்குறிய முடிவாக அமைந்தது, ஆச்சரியமாக இருந்தது.

இது சம்பந்தமாக (07.03.2003)ல் முஸ்லிம் குறல் பத்திரிகையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை இடம்பெறாமல் அவருக்கு நஸ்டஈடு வழங்கி விடயத்தை கிடப்பில் போடுவதற்கு முக்கியமான சக்திகள் முயன்று வருகின்றன. இந்த நிலையில் தலைவரின் குடும்பத்துக்கு பலலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தலைவரின் இழப்பினை இந்த இலட்சங்கள் ஈடுசெய்ய முடியாது!. ஆனால் அப்பணம் அவரின் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும்.

பேரியல் அஷ்ரப்புக்கு (20)லட்சம் ரூபாவும், அவரது மகன் அமான் அஷ்ரபிற்க்கு(50)லட்சம் ரூபாவும், தலைவருடைய தாய்க்கு (10)லட்சம் ரூபாவும், வழங்க அமைச்சரவைக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவையில், தலைவருடைய தாய் மரணித்ததை சுட்டிக்காட்டியதன் பேரில் அவருக்கு இத்தொகை வழங்கப்படதேவையில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நேரம் அமைச்சரவையில் இருந்த யாருமே தலைவரின் மரணத்திற்கான நீதி விசாரணை வேண்டும் என்று கோரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நஸ்டஈடு பெற்றுக் கொண்டதோடு நீதி விசாரணை கிடப்பில் போடப்பட்டது. சந்திரிக்காவின் அரசாங்கத்தில் பேரியல் அஷ்ரப் அவர்கள் துறைமுக கப்பற் கூட்டுத்தாபனம்,புனர் நிர்மானம், மற்றும் மறுசீரமைப்பு அமைச்சராக பணியாற்றினார். என்பதும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இப் படுகொலை நடந்து (19)நாட்களில் ரணில் விக்கிரமசிங்கா ஆட்சி வந்தது. அந்த ஆட்சியில் ரணில்,புலி உறவை பேனுவதற்காக தலைவர் அஸ்ரப் அவர்களின் படுகொலை விசாரணையை, ரணில் அரசு  கிடப்பிலே போட்டது. ரணில் அரசோடு அந்த நேரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த எந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இது சம்பந்தமாக வாயே திறக்கவில்லை.

அந்த கட்சியின் போராளிகள் என்று கூறிக்கொள்ளும் எந்த போரளியும் இன்றுவரை இது சம்பந்தமாக வாயே திறக்கவில்லை. இதைத்தான் சொல்லுவதோ! ஒருவருடைய சாவில், இன்னொருவருடைய வாழ்வு ஆரம்பிக்கின்றது என்று.

“காலம் பதில் சொல்லுமா”?

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *