பிரதான செய்திகள்

இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் மின் வழங்கள் வழமைக்கு திரும்பும் -மின்சார சபை

நாடுபூராகவும் ஏற்பட்ட மின் தடை நிலையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், தற்போது கொழும்பு மற்றும் கண்டியில் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (13) பிற்பகல் 02.30 அளவில் ஏற்பட்ட மின் தடை குறித்து தற்போது உரிய பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், மின் தடைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வில்பத்துவில் ஓர் அங்குல நிலத்திலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை! அரசஅதிபர் அறிவிப்பு

wpengine

பொது பல சேனாவின் ஜம்மியத்துல் உலமாவிற்கான கேள்வி கணைகள்

wpengine

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்

wpengine