புத்தளம் மாவட்டம், மாதம்பையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் சிலவற்றை கிரிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு பூனித பூமியாக பிரகடணப்படுத்தப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் ஊர்ப் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்று (03) மாலை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அப்பிரதேச பள்ளிவாசல்கள் நிர்வாகத்துடனும் ஊர் மக்களுடனும் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,
இது தொடர்பாக இன்று (4) செவ்வாய்க்கிழமை நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் நேரடியாக சென்று கதைப்பதாகவும், குறித்த பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்வரும் 7ஆம் திகதி அளவீடு செய்ய வருவதைனை பிற்போடுவதற்கு அல்லது தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை முஸ்லிம் மக்களின் நியாயமான கோரிகைகளை முன்வைத்து குறித்த புனித பூமி வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு செள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இக்கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.
1999 மார்ச் மாதம் 19 ஆம் திகதி வர்த்தமானியில் புனித பூமி பிரதேசமாக மாதம்பை தனிவெல்ல தேவாலயமும் அதனைச் சூழ 24 முஸ்லிம் வீடுகள் உள்ளிட்ட சிங்கள சமூகத்தினரது வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வர்த்தமானியில் பதியப்பட்ட புனிதப் பிரதேசத்தை எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் அளவீடு செய்து செய்து தேவாவலய அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இவ் அளவீட்டில் சிங்களவர்களது காணிகள் உள்வாங்கப்படாமல் இப்புனித பிரதேசத்திற்குள் அமையபெற்றுள்ள 24 முஸ்லிம் வீடுகள் மாத்திரம் உள்வாங்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டினார்.