வடகிழக்கு இணைப்புத் தொடர்பில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் நிலைப்பாடுபற்றி அறிய அக்கட்சியின் பேச்சாளர் அஹமட் புர்க்கான் (JP) வன்னி நியூஸ் தொடர்புகொண்டு கேட்ட பொழுது அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் இன்று மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையிலாக நல்லாட்சி கொண்டுவர இருக்கின்ற புதிய அரசியமைப்பு சட்டம் கருதப்படுகின்றது.
கடந்த பல தசாப்தங்கலாக எமது நாட்டில் உரிமைப் போராட்டாமும், ஆயுதப்போராட்டமும் செய்து தோல்வி கண்டு, தற்போது சர்வதேசத்தின் உதவியோடு தமிழர் தரப்பு தங்களுடைய அதிகாரங்களை வடகிழக்கை இணைப்பதன் மூலம், பெற முயற்சிக்கின்றது,
அதற்கான வேலைகளும் கணகச்சிதமாக செய்து முடிக்கப்பட்டும் விட்டது.
தற்போது அதற்கான சந்தர்ப்பமாக புதிய அரசியல் யாப்பு மாற்றத்தை கொண்டுவர அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றது.மகிந்த ராஜபக்ச அரசில், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர். பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கானது, ஏதோ ஒரு வகையில் இந்த நாட்டில் முஸ்லிம் தேசியத்தையும், இருப்பையும், பிரதிபலித்துக்காட்டுகின்றது.
அது மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிங்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளதால், அது முஸ்லிம்களுக்கே உரித்தான மாகாணம் என்பதில் இந்த நாட்டில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கக் முடியாது.
இது இவ்வாறு இருக்க, இன்று டயஸ்போராவின் உதவியுடன் தமிழர்கள் இலங்கையையும், இலங்கை அரசையும், ஐ.நா சபை வரை இழுத்துச் சென்று, வடகிழக்கை இணைத்து தங்களுடைய அதிகாரத்தை பெறுவதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
அரசும் அதற்கு வலிந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு சர்வதேசத்தின் மத்தியில் பலவீனப்பட்டுள்ளது.என்பதை சொல்வதற்கு வெட்கப்படவேண்டியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரி அவர்கள் இந்த நாட்டை பொருப்பெடுத்த காலம் தொட்டு இன்றுவரை எந்த ஒருவிடயத்தையும் அவர் சாதித்ததாக தெரியவில்லை.
முஸ்லிம்களின் ஏகோபித்த வாக்குகளினால் வந்த மைத்திரி அரசாங்கம், முஸ்லிம்களுடைய எந்த பிரச்சினையையும் தீர்த்ததாகவும் காணவில்லை.
பொது பல சேனாவின் அட்டூழியங்கள் இந்த ஆட்சியிலும் தொடர்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.அதே நேரம் நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது.
பொது பல சேனாவை மஹிந்த அடக்க தவறினார் என்று கோபித்துக் கொள்ளும் நாம், ஐ.தே.க அரசாங்கத்தில் எவ்வளவோ அநியாயங்களுக்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை நினைவு படுத்த தவருவது ஏன்?
ஜே ஆர் அவர்களின் காலத்தில் முஸ்லிம்களை மதிக்காமல் வடகிழக்கை இணைத்துக் கொடுத்து எம்மை சிறுபாண்மையிலும்,சிறுபாண்மையாக மாற்றிய வரலாறுகளை நாம் மறந்துவிட்டோமா?
1990ம்ஆண்டு பிரமதாசா காலத்தில் யாழ் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள்,
பிரமதாச புலி ஒப்பந்த காலத்தில் முஸ்லிம்கள் புலிகளினால் குதறப்படும்போது, புலி பசித்தால் புல்லையா திங்கும் என்று கேட்டவர்தான், அன்றய பாதுகாப்பு அமைச்சர் ரன்ஞன் விஜயரத்தின.
சந்திரிகா ஆட்சியிலும் மாவனலை பற்றி எரிந்தது, அவருடைய ராணுவமே அதனை முன்னின்று நடத்தியது.ரணில் காலத்தில் ரணில்,புலி ஒப்பந்தம் மூலம் முஸ்லிம்கள் சொல்லொன்னா துயரங்ளை அனுபவித்த வரலாறுகளும் உண்டு.
ரணில் ஒரு தந்திரி என்றும், அவர் ஐ.தே.கட்சி என்ற பஸ்ஸில் ரைவராக இருக்கும் வரை அந்த பஸ்சில் ஏறமாட்டேன் என்று அஸ்ரப்புடைய தலைமைத்துவத்தைஏற்றவர்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்றனர்.அந்தளவு நாம் ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலங்களில் பாதிக்கப்பட்டோம், இந்த விடயங்களுக்கெல்லாம் கோபிக்காத நாம், புலிகளை எலியாக்கி வடக்கு கிழக்கிலே முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ வழிசமைத்துத் தந்த மஹிந்தவை பாராட்டாமல் இருக்க முடியுமா?
அப்படியான மஹிந்தவை முஸ்லிம்களிடமிருந்து பிரிப்பதற்கு மேற்குலக சக்திகளின் சதியின் காரணமாக ஞானசார போன்ற தேரர்களின் விசமத்தனமான செயல்பாடுகளுக்கு துணைபோனதாக நாம் மகிந்தவை குற்றம் சுமத்தக்கூடிய ஒரு நிலையை உருவாக்கி தங்களுக்கு விசுவாசமானவர்களை இந்த நல்லாட்சிக்கு மேற்குலக சக்திகள் கொண்டுவந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வெகுகாலம் எடுக்காது என நான் நினைக்கிறேன்.
இன்று எதிர்க்கட்சியில் பலமாக இருப்பவர் மஹிந்த, அவரிடம் முஸ்லிம்கள் செல்ல மாட்டார்கள் என்ற நினைப்பில், நல்லாட்சி எம்மை கணக்கில் எடுக்காமல் அலட்சியம் செய்வதை நாம் அறிவோம்.
நாம் மஹிந்தவோடு உறவு வைக்கத் துவங்கினால் நல்லாட்சி நமது கால்களில் மண்டியிடும் என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொண்டால் சரிதான் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் பேச்சாளர் அஹமட் புர்க்கான் இவ்வாறு கூறினார்.