(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு காத்தான்குடி-02 ஊர் வீதி ஹிழ்றிய்யா பள்ளிவாயலின் கீழ் இயங்கிவரும் ஹிழ்றிய்யா மக்தப் பிரிவின் முதலாம்,இரண்டாம் வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவ,மாணவிகளுக்கான நினைவுச் சின்னம்,சான்றிதழ் வழங்கும் விழா 02-10-2016 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிழ்றிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
ஹிழ்றிய்யா பள்ளிவாயல் பொருளாளரும்,மட்டக்களப்பு மக்தப் மத்திய நிலைய உப செயலாளருமான ஏ.எல்.அப்துல் வஹாப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவ,மாணவிகளுக்கான நினைவுச் சின்னம்,சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும்,மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத்,காத்தான்குடி பெரிய மீரா ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் ,காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்,காத்தான்
இதன் போது ஹிழ்றிய்யா மக்தப் பிரிவின் முதலாம்,இரண்டாம் வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவ,மாணவிகளுக்கான நினைவுச் சின்னம்,சான்றிதழ்கள் என்பன மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால்; வழங்கி வைக்கப்பட்டது.
இதில் ஹிழ்றிய்யா மக்தப் பிரிவு முஅல்லிம்களான அல்ஹாபிழ் மௌலவி ஏ.எல்.எம்.நௌஸர் (ஹூமைதி),ஜனாபா றிஸ்வி முப்தி ஆகியோரும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு ஹிழ்றிய்யா மக்தப் பிரிவு மாணவ,மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.