பிரதான செய்திகள்

விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரை கைது செய்யவேண்டும் -பொதுபல சேனா மகஜர்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி மற்றும் முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் செய்து மகஜர் ஒன்றினை கையளித்தன.

சிங்கள ராவய, சிங்கள பெரமுன, பொதுபலசேனா, வடக்கை காத்து நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கம், கலாபோபஸ்வேவ மக்கள் உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வடமாகாண ஆளுனரின் செயலாளர், வவுனியா அரச அதிபர் உள்ளிட்டோர் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கான மகஜர் வழங்கப்பட்டது.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

  • எழுக தமழ் பேரணியில் தலைமை தாங்கி நடத்திய விக்னேஸ்வரன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்,
  • கலாபோபஸ்வேவ பிரதேசத்தை உள்ளடக்கிய தனிப்பிரதேச செயலக பிரிவு உருவாக்கப்பட வேண்டும்,
  • மீள்குடியேறிய சிங்கள மக்களுக்கு மத்திய அரசாங்கம் உதவி வழங்க வேண்டும்,
  • வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது,
  • விகாரைகளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்,
  • உள்ளூராட்சி சபை எல்லைகளை சரியாக மேற்கொண்டு தேர்தல் நடத்த வேண்டும்

போன்ற விடயங்கள் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தன.625-0-560-320-160-600-053-800-668-160-90-1

292035308prot-1

Related posts

முஸ்லிம்களும் இந்த மண்ணின் சொந்தக்கார்களே! ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி

wpengine

பேஸ்புக் தற்கொலைக்கு புதிய தொழில்நூட்பம்

wpengine

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் அனுரகுமார கைச்சாத்திட்டனர்.

wpengine