Breaking
Fri. Nov 22nd, 2024

(lambart)

மன்னார் எழுத்தூர் செல்வ நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் ‘அம்மன் சிலை’ ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த வீட்டின் அடையாளம் காணப்பட்ட பகுதி நேற்று  (30) வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்ட போதும் குறித்த அகழ்வில் இருந்து எந்த வகையிலான பொருட்களும் மீட்கப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் எழுத்தூர் செல்வ நகர் கிராமத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரது வீட்டு வளாகத்தில் அம்மன் சிலை ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாகவும்,குறித்த சிலை தொடர்பாக குறித்த வீட்டு உரிமையாளருக்கு அடிக்கடி கனவு ஏற்பாடுவதாகவும், அதனைத் தொடர்ந்து  தொடர்ச்சியாக தனது வீட்டில் இனம் தொரியாத நபர்களின் நடமாட்டம் காணப்படுவாதகவும் இதனால் தனக்கும் ,தனது குடும்பத்தினருக்கும் அச்சுரூத்தல் ஏற்பட்டுள்ளதாக குறி குறித்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியர் கடந்த 27 ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

-மன்னார் பொலிஸார் குறித்த முறைப்பாடு தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக குறித்த வீட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதி தோண்ட நடவடிக்கை மேற்கொள்ள உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டார்.

-இந்த நிலையில் குறித்த வீட்டின் அடையாளம் காணப்பட்ட பகுதி இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன் போது தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள்,தடவியல் நிபுனத்துவ பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர்,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் அடையாளம் காணப்பட்ட பகுதி தோண்டப்பட்டது.unnamed-2

-சுமார் 2 மணித்தியாலங்கள் வரை அடையாளம் காணப்பட்ட பகுதி தோண்டப்பட்டது.
சுமார் 10 அடி வரை தோண்டப்பட்ட போதும் குறித்த அகழ்வின் போது எதிர்பார்த்த அம்மன் சிலையோ அல்லது வேறு எந்த தடையப்பொருட்கலோ மீட்கப்படவில்லை.unnamed-4

இந்த நிலையில் குறித்த இடத்தை தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.unnamed-1 unnamed-3

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *