முறையான திட்டமிடல் இல்லாமல் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களையும் உயர்தரம் கற்க வைக்க நினைப்பது பிழையான விடயமெனவும் குறித்த நடைமுறை பயனுள்ளதாக அமைந்தாலும் அதனை வாய்ப்பேச்சில் மட்டும் சாதித்துவிட முடியாதென ஆசிரிய சங்கத்தின செயளாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் முறையாக பயிற்றப்பட்ட ஆசிரியர் குறைவாகவுள்ள நிலையில் 24 புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தி உயர்தர வகுப்பில் மாணவர்களை தொடர்ந்தும் வைத்திருப்பதால் எவ்விதமான பயனும் ஏற்படப்போவத்தில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள குறித்த நடைமுறை தொடர்பில் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.